பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு:ரஷ்ய அதிபர் பிரதமர் மோடிக்கு உறுதி!
இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ள 23வது இந்தியா-ரஷ்யா உச்சி மாநாட்டிற்கு வருகை தர ரஷ்ய அதிபரை பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஏற்றுக்கொண்டதாக கிரெம்ளின் மாளிகை அறிவித்துள்ளது
மேலும் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு ரஷ்யா முழு ஆதரவை அழிப்பதாக பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் ரஷ்ய அதிபர் கூறியுள்ளதாக வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஷ்வால் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார் மேலும் இரண்டாம் உலகப்போரில் வெற்றி பெற்றதன் 80 ஆம் ஆண்டு நிறைவை கொண்டாடும் ரஷ்யாவின் அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்