பாகிஸ்தான் ஏவுகணையை இடைமறித்து அழித்த இந்தியா: மாஸ் காட்டிய இந்திய ராணுவம்!
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா நேற்று முன்தினம் சிந்துார் ஆபரேஷன் என்பதை கையில் எடுத்த வழி நடத்தியது. இதில் குறிப்பாக ஒன்பது தீவிரவாத முகாம்கள் தகர்த்தெறியப்பட்டதாக இந்திய ராணுவம் சார்பில் அறிவிக்கப்பட்டது குறிப்பாக பல பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த தீவிரவாதிகள் இதில் வீழ்த்தப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பஞ்சாபின் அமிர்தசரஸ் பகுதியில் பாகிஸ்தான் ஏவுகணையை இடைமறித்து இந்தியா அழித்தது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 'ஆபரேஷன் சிந்துார்' என்ற பெயர் சூட்டி, நம் ராணுவம் நடத்திய அதிகாலை தாக்குதலில், ஒன்பது பயங்கரவாத தளங்கள் தரைமட்டம் ஆக்கப்பட்டன. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு நேற்று இரவு இந்தியா மீது ஏவுகணையால் தாக்க பாகிஸ்தான் ராணுவம் முயற்சி செய்தது.
பஞ்சாபின் அமிர்தசரஸ் பகுதியில் பாகிஸ்தான் ஏவுகணையை இடைமறித்து இந்தியா அழித்தது. பஞ்சாப் எல்லையில் ட்ரோன், ஏவுகணைகளை துல்லியமாக கண்டறிந்து சுட்டு வீழ்த்தும் அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த கருவிகள் பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தி சுக்கு நூறாக்கியது