இந்த ஆண்டு நாடு முழுக்க நல்ல மழை இருக்கும் - இந்திய வானிலை ஆராய்ச்சி மையம்!

இந்த ஆண்டு நாடு முழுக்க நல்ல மழை இருக்கும் - இந்திய வானிலை ஆராய்ச்சி மையம்!

Update: 2020-04-15 14:29 GMT

ஆன்லைன் மூலம் செய்தியாளர்களை சந்தித்த இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அதிகாரிகள் இந்த ஆண்டு நாடு முழுக்க நல்ல மழை இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

பருவமழைக்கான முன்னறிவிப்பின் (எல்.ஆர்.எஃப்) முதல் கட்டத்தில், தென்மேற்கு பருவமழை காலத்தில், ஜூன் முதல் செப்டம்பர் வரை, நாடு முழுவதும் மழை நன்றாக இருக்க வாய்ப்புள்ளது. 96 முதல் 100 சதவிகிதம் சாதாரண மழைக்காலமாகக் இருக்க வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் பூமி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் மாதவன் ராஜீவன் கூறுகையில், 2020 ஆம் ஆண்டு பருவமழை காலத்தில், பருவமழை மழைப்பொழிவு, அதன் நீண்ட கால சராசரியில் 100 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நல்ல செய்தி என்னவென்றால், குறைவான மழைப்பொழிவு 9 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது எனக் கூறினார்.h


Similar News