நவம்பர் 1-ம் தேதி உள்ளாட்சிகள் தினமாக கொண்டாடப்படும்: ஊரக வளர்ச்சித் துறை தகவல்!
தமிழக முதலமைச்சர் அறிவிப்பின்படி நவம்பர் ஒன்றாம் தேதி உள்ளாட்சிகள் தினமாக கொண்டாடப்பட இருக்கிறது.
ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை முதன்மை செயலாளர் அமுதா அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இது பற்றி கூறுகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி அன்று தமிழ்நாடு சட்டப்பேரவை விதிகள் என் நூற்றி பத்தியின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் ஒன்றாம் நாள் உள்ளாட்சிகளின் தினமாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி தமிழகத்தில் நவம்பர் ஒன்றாம் தேதி உள்ளாட்சிகள் தினம் கொண்டாடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நவம்பர் ஒன்றாம் தேதி உள்ளாட்சிகளின் தினமாக கொண்டாடப்படும் என்று அறிவிப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. இந்த அறிவிப்புக்கு இணங்க உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாட்டில் ஒளிவு மறைவு அற்ற வெளிப்படை தன்மையினை ஏற்படுத்த வேண்டியது.
உள்ளாட்சி அமைப்புகளின் சாதனைகள் மற்றும் திட்ட செயலாளர்கள் குறித்து தகவல் கல்வி மற்றும் தொலைத்தொடர்பு இயக்கங்கள் நடத்தவும் ஏதுவாக நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சிகள் தினமாக கொண்டாடப்பட ஆவணம் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக அனைத்து உள்ளாட்சிகளும் தங்களுடைய முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் வெளியாகியிருக்கிறது.
Input & Image courtesy: News 18