#fact check: தப்ரேஸ் அன்சாரி என்ன தியாகியா..? 2018இல் யூடியூப்பில் வெளியான வீடியோவை வைத்து போலி செய்தி பரப்பும் போராளிகள் - உண்மை விவரம் உள்ளே.!

#fact check: தப்ரேஸ் அன்சாரி என்ன தியாகியா..? 2018இல் யூடியூப்பில் வெளியான வீடியோவை வைத்து போலி செய்தி பரப்பும் போராளிகள் - உண்மை விவரம் உள்ளே.!

Update: 2019-07-03 03:19 GMT

ஜார்கண்ட் மாநிலத்தில் தப்ரேஸ் அன்சாரி என்ற இளைஞர் ஜெய் ஸ்ரீராம் மற்றும் ஜெ ஹனுமான் என கூற மறுத்த காரணத்தால் மின்கம்பத்தில் கட்டிவைத்து அடித்தே கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் உண்மையில் அவர் திருட்டு சம்பவத்தில் தொடர்பு கொண்டிருந்ததால் தான் தாக்கப்பட்டார் என்ற தகவல் பின்னர் வெளியானது.


ஜூன் 18 ஆம் தேதி தாக்கப்பட்ட அன்சாரி பின் காவல்துறையினரால் கைது செய்யப்படார். கைதான அன்சாரி ஜூன் 22 ஆம் தேதி உயிரிழந்தார். அன்சாரி உயிரிழந்து ஒரு வாரமாகி விட்ட நிலையில், இந்த கோர சம்பவம் தற்சமயம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


சமூக வலைதளங்களில் திடீரென பரவும் வீடியோ ஒன்று, தப்ரேஸ் அன்சாரியின் மரணத்திற்கு நீதி கேட்கும் தலைப்புகளை கொண்டிருக்கிறது. வைரல் வீடியோவின் தலைப்பில் தப்ரேஸ் அன்சாரியின் இறுதி ஊர்வலம் மற்றும் தப்ரேசுக்கு நீதி கோரும் ஹேஷ்டேக்களும் இடம்பெற்றிருக்கிறது.



வைரல் சமூக வலைதள பதிவு ஸ்கிரீன்ஷாட்


இந்த வீடியோவை இணையத்தில் தேடும் போது செப்டம்பர் 22, 2018இல் யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட உண்மை வீடியோ காணப்படுகிறது. இந்த வீடியோ தான் தற்சமயம் சமூக வலைதளங்களில் பரபரப்பு தலைப்புகளில் வைரலாகி வருவது உறுதியாகியுள்ளது.


கடந்த ஆண்டு செப்டம்பரில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும் வீடியோவில் தப்ரேஸ் இறுதி ஊர்வலத்தில் பல ஆயிரம் பேர் கலந்து கொண்டனர் எனும் தலைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதே வீடியோவினை தனியார் செய்தி நிறுவனமும் பகிர்ந்து இருக்கிறது.


அந்த வகையில் தற்சமயம் வைரலாகும் வீடியோ சில தினங்களுக்கு முன் மரணித்த தப்ரேஸ் அன்சாரியின் இறுதி ஊர்வலத்தில் எடுக்கப்படவில்லை என்பதும் தெளிவாகிவிட்டது.


சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலி செய்திகள் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். இணையத்தில் ஒரு தகவலை பதிவிடும் முன் அதன் உண்மைத்தன்மை பற்றிய தேடல் இன்றை காலக்கட்டத்தில் மிகவும் அவசியமானதாகும். வலைதளங்களில் வெளியாகும் வதந்திகளால் உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கிறது.


Similar News