கர்நாடகாவில் காங்கிரஸ் பிடியில் இருந்து மேலும் ஒரு எம்.எல்.ஏ., எஸ்கேப்...ஆட்சி கவிழ்வது உறுதி என தகவல்கள் !!

கர்நாடகாவில் காங்கிரஸ் பிடியில் இருந்து மேலும் ஒரு எம்.எல்.ஏ., எஸ்கேப்...ஆட்சி கவிழ்வது உறுதி என தகவல்கள் !!

Update: 2019-07-18 10:37 GMT


காங்கிரஸ் பிடியில் இருந்து எம்.எல்.ஏ., ஸ்ரீமந்த் பாலாசாஹேப் பட்டேல் எஸ்கேப் ஆகி இருப்பதால் கர்நாடகா அரசியலில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவிருந்த நிலையில் இவர் எஸ்கேப் ஆகி இருப்பதால், முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு தப்புவது கேள்விக்குறியாகி உள்ளது.


கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு தப்புமா? தானாக கவிழுமா என்பது இன்று தெரிந்து விடும். மாநிலத்தில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. 


கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து 13 எம்.எல்.ஏ.,க்கள், மஜதவில் இருந்து 3 எம்.எல்.ஏ.,க்கள் தங்களது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து மும்பை சென்றனர். அங்கு பாஜக ஆதரவுடன் ஓட்டலில் தங்கி வருகின்றனர். இந்த நிலையில் இவர்களது ராஜினாமாவை சபாநாயகர் ரமேஷ் குமார் ஏற்றுக் கொள்ளவில்லை. இதை எதிர்த்து ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.,க்கள் உச்சநீதிமன்றம் சென்றனர். 


இதையடுத்து தீர்ப்பு அளித்த உச்சநீதிமன்றம் ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.,களை நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளுமாறு வற்புறுத்தக் கூட்டது. சபாநாயகரின் முடிவில் நீதிமன்றம் தலையிடாது என்று கூறி இருந்தது. இன்று காலை 11மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் முதல்வர் குமாரசாமி அறிவித்து இருந்தனர். 


இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது எப்படியும் ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.,க்கள் மனது மாறி நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொண்டு காங்கிரஸ், மஜத கூட்டணிக்கு வாக்களிப்பார்கள் என்று நம்பப்பட்டது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்டுபாட்டில் ஓட்டலில் இருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஸ்ரீமந்த் பாலாசாஹேப் பட்டேல் எஸ்கேப் ஆகியுள்ளார். நேற்று இரவு 8 மணி வரை ஓட்டலில் இவர் இருந்துள்ளார். இதற்குப் பின்னர்தான் இவர் மாயமாகியுள்ளார். இவரை விமான நிலையம் என அனைத்து இடங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் தேடி வருகின்றனர். 


இதற்கு முன்னதாக ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராமலிங்க ரெட்டி கூட்டணி அரசுக்கு ஆதரவாக வாக்கு அளிக்க இருப்பதாக அறிவித்து இருந்தார். மும்பையில் முகாமிட்டு இருக்கும் ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.,க்கள் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர். இந்த நிலையில் குமாரசாமி அரசு கவிழ்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றே சொல்லப்படுகிறது.


Similar News