குறைந்த எண்ணிக்கையாக இருப்பினும் எதிர்க்கட்சி குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்!! பிரதமர் மோடி பெருமை மிகுந்த கருத்து !!

குறைந்த எண்ணிக்கையாக இருப்பினும் எதிர்க்கட்சி குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்!! பிரதமர் மோடி பெருமை மிகுந்த கருத்து !!

Update: 2019-06-17 07:59 GMT

குறைந்த எண்ணிக்கையில் எதிர்கட்சியினர் இருந்தாலும் எண்ணிக்கை பெரிதல்ல. அவர்களின் குரல் மக்களின் நலனுக்காக ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம் என்றார்.


பார்லி., முதல் கூட்டத்திற்கு இன்று வந்த பிரதமர் மோடி பார்லி.,வளாகத்தில் நிருபர்களிடம் பேசுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.


இந்த லோக்சபா சுமூகமாக நடக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அவைக்கு வரும் புதிய நண்பர்களை வரவேற்கிறேன். அவர்கள் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற கனவுகளையும், உணர்வையும் நான் அறிவேன். புதிய உறுப்பினர்கள், புதிய கனவுகளை இந்த லோக்சபாவில் காண்கிறோம். சுதந்திர இந்தியாவில் அதிகம் பெண்கள் உறுப்பினர்கள் தற்போது வந்துள்ளனர். ஏழைகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுபவராக உறுப்பினர்கள் இருக்க வேண்டும்.


மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகள் ஆக்கப்பூர்வமாக விவாதிக்கப்பட வேண்டும். எதிர்கட்சியினர் பார்லிமென்ட் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஜனநாயகத்தில் எதிர்கட்சி மிகவும் முக்கியமானது. அதன் மதிப்பை நாங்கள் அறிவோம். வலுவான எதிர்கட்சி ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அவசியம். குறைவான எண்ணிக்கையில் எதிர்கட்சியினர் இருந்தாலும் அவர்களின் குரல் வலுவாக எதிரொலிக்க வேண்டும் என்பதே எண்கள் விருப்பம். அவர்களின் உணர்வை மதிப்போம். இவ்வாறு மோடி கூறினார்.


Similar News