எங்கள் முடிவு ஊரடங்கு நீட்டிப்பு தான் என்றாலும் பிரதமர் தான் இறுதி முடிவெடுப்பார்: கர்நாடக முதல்வர் எடியூரப்பா

எங்கள் முடிவு ஊரடங்கு நீட்டிப்பு தான் என்றாலும் பிரதமர் தான் இறுதி முடிவெடுப்பார்: கர்நாடக முதல்வர் எடியூரப்பா

Update: 2020-04-09 10:39 GMT

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 540 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,734 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 166 பேர் உயிரிழந்தள்ளனர்.

இந்த நிலையில், கர்நாடகாவில் தற்போது 180 பேருக்கு கொரோனா பாசிடிவ் உள்ளது. 5 பேர் பலியாகியுள்ளனர். 28 பேருக்கு கொரோனா நோய் தாக்கியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் 30 மாவட்டங்கள் உள்ளன. இதில் பெங்களூரு நகரம், மைசூர், வட கன்னடா, தென் கன்னடா, சிக்பல்லாபூர், கல்புர்கி பீதர், உடுப்பி, மாண்டியா, பாகல் கோட் தாவணகேரே, தும்கூர், கதக், தார்வாட் ஆகிய 18 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து உள்ளது.

ஊரடங்கு அறிவித்து 16 நாட்கள் முடிந்தும் கடுமையாக கடைபிடிக்க செய்தும் மாநிலத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று குறைந்த பாடில்லை.அதிகரித்தவாறே உள்ளது. இந்த நிலையில் பெங்களூரில் முதல்வர் எடியூரப்பா தலைமையில் கொரோனா வைரஸ் நோய் தடுப்புக்கு ஆலோசனை நடத்த அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

கூட்டம் முடிந்ததும் முதல்வர் எடியூரப்பா கூறுகையில்: கர்நாடகாவில் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க அனைத்து அமைச்சர்களும் ஆதரவு என்றும் அமைச்சர்கள் ஆதரவு அளித்தாலும் இறுதி முடிவை பிரதமர் மோடி எடுப்பார் என்றும் அவ்வாறு அனுமதித்தால் மேற்கண்ட தொற்று பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் கண்டிப்பான உத்தரவுகள் வரும் என்றும் கூறியுள்ளார்.

Similar News