PM கிஷான் திட்டத்தில் நிதி தேவை இல்லையா? மத்திய அரசு புதிய ஒரு திட்ட அம்சம்!

பிரதான் மந்திரி கிஷான் திட்டத்தின் கீழ் நிதி தேவை இல்லை என்றால் அதை சரண்டர் செய்வதற்கு புதிய ஒரு திட்ட அம்சம் கொண்டுவரப் பட்டிருக்கிறது.

Update: 2023-02-23 11:54 GMT

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆட்சியின் கீழ் விவசாயிகளுக்கு வழங்க கொண்டுவரப்பட்ட மிகப்பெரிய திட்டமாக பிரதான் மந்திரி கிஷான் யோஜனா திட்டம் திகழ்ந்து வருகிறது. குறிப்பாக விவசாயிகள் தங்களுக்கு தேவையான நிதி உதவிகளை பெரும் ஒரு திட்டமாக இது அமைந்து இருக்கிறது. பல்வேறு தரப்பு விவசாயிகள் சுழற்சி முறையில் இந்த திட்டத்தின் கீழ் நிதி உதவிகளை சுமார் 2000 முதல் 6 ஆயிரம் வரை பெற்று வருகிறார்கள். இந்தத் திட்டத்தில் தற்பொழுது விவசாயிகள் மட்டும் தங்களுக்கு நிதி உதவி தேவை இல்லை என்ற ஒரு அம்சத்தை பயன்படுத்தி நிதி உதவிகளை நிறுத்திக் கொள்ள முடியும்.


மத்திய வேளாண் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தற்பொழுது இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் விவசாயிகள் தங்களுக்கு நிதி உதவி தேவை இல்லை என்ற ஒரு ஆப்ஷனை பயன்படுத்தி நிதி உதவியை நிறுத்திக் கொள்ள அனுமதிக்கப் படுவதாக கூறப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகள் நான்கு மாதத்திற்கு ஒரு முறை ரூ. 2000 பெறும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. எனவே ஒரு ஆண்டிற்கு 6000 ரூபாய் இவர்கள் தவணைகளாக பெற்றுக் கொள்கிறார்கள்.


இப்படி இதில் பயனடைந்து வரும் விவசாயிகள் 12 தவணைகளாக அவர்களுக்கு நிதி உதவி தற்போது வரை விளங்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகிற தகுதியான பயனாளிகள், தங்களுக்கு பிம் கிசான் தவணை நிதி வேண்டாம் என்று தாங்களாக முன்வந்து கூறும் வாய்ப்பை (PM Kisan benefit surrender Scheme) மத்திய வேளாண் துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Input & Image courtesy: News 18

Tags:    

Similar News