பிரதமர் நரேந்திர மோடி, கிர்கிஸ்தான் புறப்பட்டு சென்றார்! உலக தலைவர்களை சந்தித்து பேசுகிறார்!!

பிரதமர் நரேந்திர மோடி, கிர்கிஸ்தான் புறப்பட்டு சென்றார்! உலக தலைவர்களை சந்தித்து பேசுகிறார்!!

Update: 2019-06-13 06:45 GMT

கிர்கிஸ்தானின் தலைநகர் பிஷ்கெக் நகரில், எஸ்சிஓ எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நாளை (ஜூன் 14) தொடங்குகிறது. 2 நாட்கள் இந்த மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியிலிருந்து தனி விமானத்தில் பிஷ்கெக் நகருக்கு புறப்பட்டு சென்றார். பிரதமர் மோடி செல்லும் விமானம், பாகிஸ்தான் வான் எல்லையை பயன்படுத்தாமல் ஓமன், ஈரான் நாடுகள் வழியாக கிர்கிஸ்தானுக்கு செல்கிறது. இது இன்று பிற்பகல் 3 மணிக்கு பிஷ்கேக் விமான நிலையம் சென்றடைகிறது. பிஷ்கெக் நகரில் பிரதமர் மோடி, மாலை 4.50 மணிக்கு சீன அதிபர் ஜின்பிங்கையும், 5.30 மணிக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதினையும், 6.30 மணிக்கு கிர்கிஸ்தான் அதிபர் சூரான்பே ஜீன்பெகோவையும் சந்தித்து பேசுகிறார். இரவு 10 மணிக்கு ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனியை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.


Similar News