பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்த ஆரோக்கிய சேது ஆப் 13 நாட்களில் 50 மில்லியன் பயனாளர்களை எட்டி உலகளாவிய சாதனை!

பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்த ஆரோக்கிய சேது ஆப் 13 நாட்களில் 50 மில்லியன் பயனாளர்களை எட்டி உலகளாவிய சாதனை!

Update: 2020-04-16 10:30 GMT

சித்திரை மாதம் முதல் நாளாகிய நேற்று முன்தினம், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, மிகக் கடுமையான அதே நேரத்தில் முக்கியமான கட்டத்தில் உள்ளோம். இதனால் நாடு முழுவதும் வருகிற 3ம் தேதி 19 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கும் என்றார். மேலும், 7 விஷயங்களை கடைபிடிக்க வேண்டுகோள் விடுத்தார். இதில், முக்கியமாக, கொரோனா தொற்று பரவாமல் தடுக்க, நிச்சயமாக 'ஆரோக்யா சேது' மொபைல் ஆப்பை பதிவிறக்கவும். இந்த பயன்பாட்டைப் பதிவிறக்க மற்றவர்களை ஊக்குவிக்கவும் என்றார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று பொதுமக்களில் ஏராளமானோர் ஆரோக்யா சேது' மொபைல் ஆப்பை பதிவிறக்கம் செய்துள்ளனர். இது தொடர்பாக நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளதாவது: 50 மில்லியன் பயனாளர்களை சென்றடைய டெலிபோனுக்கு 75 ஆண்டுகள், ரேடியோ சென்றடைய 38 ஆண்டுகள், டி.வி.,க்கு 13 ஆண்டுகள், இணையத்திற்கு 4 ஆண்டுகள், பேஸ்புக்கிற்கு 19 மாதங்கள், போக்கிமான் கோ 19 நாட்கள். ஆனால், தற்போது ஸ்மார்ட் போன்களில் மட்டுமே பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள "ஆரோக்கிய சேது ஆப்" 13 நாட்களிலேயே 50 மில்லியன் பயனாளர்களை எட்டி உள்ளது என பதிவிட்டுள்ளார்.  

Similar News