நாளை தேனி, ராமநாதபுரம் பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதற்காக இன்று மதுரை வருகிறார் பிரதமர் மோடி!

நாளை தேனி, ராமநாதபுரம் பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதற்காக இன்று மதுரை வருகிறார் பிரதமர் மோடி!

Update: 2019-04-12 06:18 GMT

தேனி, ராமநாதபுரத்தில் நடை பெறும் பிரச்சாரப் பொதுக்கூட் டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று மதுரை வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நாளை தேனி, ராமநாதபுரத்தில் நடக்கவுள்ளது. இதற்காக முதல் நாளே பிரதமர் மதுரை வந்து விடுகிறார்.


இது குறித்து தேனி பொதுக்கூட்ட ஒருங்கிணைப்பாளரான மாநில பாஜக செயலாளர் ஆர்.ஸ்ரீனிவாசன் கூறியது: தேனியில் நடக்கும் கூட்டத்தில் பிரதமருடன் தமிழக முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேமுதிக சார்பில் பிரேமலதா, மருத்துவர் கிருஷ்ணசாமி, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.


பிரதமர் இன்று (ஏப்.12) மதுரை வருகிறார்.இரவில் தனி விமானம் மூலம் மதுரை வரும் பிரதமர், விமான நிலையத்திலிருந்து கார் மூலம் மதுரை பசுமலை பகுதியிலுள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார். நாளை (ஏப்.13) ஓட்டலிலிருந்து விமான நிலையத்துக்கு காரில் செல் லும் பிரதமர், அங்கிருந்து ஹெலி காப்டரில் காலை 10 மணியளவில் தேனி செல்கிறார். அங்கு பொதுக்கூட்டத்தில் பேசிய பின், ஹெலிகாப்டரில் ராமநாதபுரம் செல்கிறார். அங்கு பேசிய பின் மீண்டும் மதுரை விமான நிலையம் வரும் பிரதமர், இங்கிருந்து விமானத்தில் புறப்படுகிறார்.


மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, தென் காசி ஆகிய 6 தொகுதிகளின் வேட் பாளர்கள் பங்கேற்பர். ராமநா தபுரத்தில் நடக்கும் கூட் டத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி மக்களவைத் தொகுதிகளின் வேட்பாளர்கள் பங்கேற்பர். விஜயகாந்த் பங்கேற்பது குறித்து ஆலோசனை நடக்கிறது. இரு கூட்டங்களையும் பிரம்மாண்டமாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


Similar News