போலீஸ்பாளையமாக மாறிப்போன மேலப்பாளையம்.. நான்கு பக்கமும் சீல் வைப்பு..

போலீஸ்பாளையமாக மாறிப்போன மேலப்பாளையம்.. நான்கு பக்கமும் சீல் வைப்பு..

Update: 2020-04-01 05:27 GMT

டில்லியில் தப்லீக் ஜமாத்' என்ற, இஸ்லாமிய பிரசார குழுவினர் டில்லியில், மார்ச், 21 முதல் மூன்று நாட்கள் டெல்லி அரசின் எச்சரிக்கை மற்றும் தடை உத்தரவை மீறி இஸ்லாமிய மாநாடு நடத்தினர். இந்த மாநாட்டில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த, 1,500 பேரில், 51 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்திருப்பது உறுதியாகி உள்ளது. அதனால் டெல்லியில் இருந்து வந்த அனைவரையும் தனிமைபடுத்திக் கொள்ளவும், சிகிச்சை படுத்திக் கொள்ளவும் அரசு கட்டாயப்படுத்தி வருகிறது.

ஆனால் 1,500 பேரில் 800 பேர்கள் குறித்து மட்டுமே அரசுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்களின் முகவரி கிடைக்க பெற்றதால் அவர்களை அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு வருகிறது. ஆனால் மீதி 700 பேர் வரை சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. ஆனால் அவர்கள் நெல்லை அருகே உள்ள முஸ்லிம்களின் கோட்டை என கருதப்படும் மேலப்பாளையத்தை சேர்ந்தவர்களாக மட்டுமே இருக்க முடியும் கூறப்படுகிறது.

பொறுப்பில்லாத, விழிப்பில்லாத இவர்கள் மூலம் வெகு விரைவில் வைரஸ் பரவி ஆயிரம் பேர் கடைசியில் இலட்சம் பேர் என கொரோனா தித்று பரவிவிடும் என்பதால் தமிழக சுகாதாரத்துறை போலீஸ் துணையுடன் மேலப்பளையத்தை சுற்றி சீல் வைத்துள்ளது.

வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்ல முடியாது, உள்ளே இருப்பவர்கள் வெளியே செல்ல முடியாத அளவுக்கு அந்த ஏரியாவையே நோய் பரவ விடாமல் தனிமை படுத்தியுள்ளதாக நேற்று இரவு சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் மேலப்பாளையத்தின் நான்கு பக்கமும், போலீசார் சூழ்ந்துள்ளனர். நகரம் முழுவதும் போலீஸ் கட்டுக்குள் வந்துள்ளதாகவும், உள்ளே வீதி வீதியாக சுகாதாரப் பணியாளர்களால் மேலப்பாளையம் குவிந்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. 

Similar News