தமிழகத்தில் தொற்று எண்ணிக்கையை அறிவிப்பதில் கூட சிறுபான்மையினருக்கு சாதகமாக அரசியல்! கொந்தளிக்கும் குடிமகன்கள்.!

தமிழகத்தில் தொற்று எண்ணிக்கையை அறிவிப்பதில் கூட சிறுபான்மையினருக்கு சாதகமாக அரசியல்! கொந்தளிக்கும் குடிமகன்கள்.!

Update: 2020-04-11 10:31 GMT

கடந்த 2 வாரங்களுக்கு முன்புவரை தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமாகத்தான் இருந்தது. ஆனால் டெல்லியில் நடைபெற்ற தப்ளிகி ஜமாஅத் மாநாட்டுக்கு சென்றவர்கள் திரும்பிய பின்னர்தான் தொற்று பரவியதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு கூடிவிட்டது. அதுவும் தமிழகத்தில் மட்டும் மேற்கண்ட டெல்லி நிகழ்ச்சியில் தொடர்புடையவர்களால் ஏற்பட்டுள்ள தொற்றுக்களின் எண்ணிக்கை மொத்த தொற்றுக்களில் 90 சதவீதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நேற்றைய முன்தினம் ஏப்ரல் 9 ம் தேதி மட்டும் தமிழகத்தில் புதிதாக அறியப்பட்ட தொற்றுக்களின் எண்ணிக்கை மொத்தம் 96 பேர். இதில் 84 பேர் தப்லிகி ஜமாஅத் மாநாட்டில் பங்கேற்று வந்தவர்கள். ஆனால் தமிழக சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் நேரடியாக அவ்வாறு குறிப்பிடாமல் "அந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களால்" ஏற்பட்ட புதிய தொற்று 84 என்று யாரோ கொடுக்கும் அழுத்தத்துக்கு உட்பட்டு தனது அறிக்கையை மிகவும் அடங்கி வாசிக்கிறார்.

ஆனால் இதே பீலா ராஜேஷ் தமிழக தொற்று நிலவரம் தொடர்பான தகவல்களை சில நாட்களுக்கு முன்பு பகிர்ந்து கொண்டபோது 'டெல்லி மாநாட்டு நிகழ்ச்சிக்கு சென்று வந்தவர்கள்' என்றுதான் குறிப்பிட்டார். இதற்கு காரணம் ஒரு அரசியல் அழுத்தத்துக்கு உட்பட்டு தமிழக அரசு பீலா ராஜேஷை இவ்வாறு கூறுமாறு செய்திருக்கலாம் என்றும், என்றாலும் கோடிக்கணக்கான மக்களுக்கு ஆபத்தை பரப்பும் ஒரு காரியத்தை செய்த ஒரு அமைப்பின் பெயரை மூடி மறைப்பது உண்மையான மதசார்பற்ற தன்மையா எனவும் பலரும் கேள்வி எழுப்பியுள்ளதாக சில ஆங்கில பத்திரிகைகள் கேள்வி எழுப்பியுள்ளன.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு மட்டுமல்ல, தேசம் முழுவதும் உள்ள பொறுப்பான கட்சிகளும் கூட இந்த விவகாரம் தப்லிகி ஜமாஅத் அமைப்பால்தான் ஏற்பட்டது என்பதை முழுக்க மூடி மறைக்கப் பார்க்கிறார்கள். இதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி யாரும் கருதவில்லை. அவர்களை கண்டிக்க கூட எந்த அரசியல் கட்சிகளுக்கும் மனம் வரவில்லை.

அரசின் எச்சரிக்கைகளை,தடைகளை மீறி டெல்லியில் தப்ளி-ஜமாஅத் நிகழ்ச்சி நடந்திருக்கலாமா என்றும், இந்துக்கள் ஹோலி போன்ற மிகப்பெரிய விழாக்களை நிறுத்தியவுடன் முஸ்லிம்களும் அந்த நிகழ்ச்சிகளை நிறுத்தி இருக்க வேண்டும் என நியாயமான கேள்வியை எழுப்பியவர் தமிழ்நாட்டை சேர்ந்த சமூக ஊடக பேச்சாளர் மாரிதாஸ். ஆனால் யாரோ கொடுத்த அழுத்தத்தை வைத்து மாரிதாஸ் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது தமிழக அரசு. இது தமிழகத்தில் எந்த அளவுக்கு பெரும்பான்மை இன மக்களுக்கு எதிரான ஒரு போலி மத சார்பின்மையை வெளிபடுத்துகிறார்கள் என்பதை காட்டுகிறது.

இன்னொரு முக்கிய சம்பவம்

இங்குள்ள ஆளும் கட்சியும் ஆகட்டும், எதிர்கட்சிகளும் ஆகட்டும் கொரோனா தொற்று விவகாரத்தில் ஒரு கண்டிப்பு உணர்வு இல்லாமல். பொறுப்புணர்வு இல்லாமல் அல்பத்தனமான அரசியல் புத்தியில் கிடக்கின்றன என்பதற்கு மற்றொரு உதாரணம்: கீழக்கரையை சேர்ந்த வர்த்தகர் ஜமால் உடலை கொரோனா தொற்று என தெரிந்தும் சிறுபான்மை இனத்தை சேர்ந்த பழமைவாதிகளின் பேச்சுக்கு கட்டுப்பட்டு சென்னையில் இருந்து புதுகோட்டை மாவட்டத்தில் உள்ள கீழக்கரைக்கு அனுப்பி வைத்ததுதான்.

பழமைவாதிகளின் ஒரே விருப்பம் இறந்தவரை தங்கள் மத சம்பிராதயங்களுக்கு உட்பட்டு தங்கள் ஊர் மண்ணில் புதைக்க வேண்டும் என்பதுதான். ஏனெனில் இறந்தவர் ஒரு கோடீஸ்வரர் என்பதால் மத சம்பிராதயங்களின் மீது அதிக பட்ச அக்கறை வந்துவிட்டது. இது ஒரு ஆபத்தான நேரம் என்று தெரிந்தும் இவர்களின் இந்த ஆசையை நிறைவேற்ற சுகாதாரத்துறையின் விதிமுறைகள், ஐ.நா.சுகாதார சபையின் வழி காட்டுதல்கள் எல்லாவற்றையும் மீறியது மட்டுமன்றி, நோயாளி குறித்த பல உண்மைத் தகவல்களை மூட மருத்துவர்களுக்கு அரசியல் அழுத்தம் கொடுத்து ஒரு இறந்தவரின் பிணத்தை அனுப்புவதில் இவர்கள் செயல்பட்டுள்ளனர்.

ஜமாலின் உடலை 3 ஆம்புலன்ஸ்கள் மூலம் மாவட்ட எல்லைகளில் மாற்றி மாற்றி கொண்டு சென்றது மட்டுமன்றி, தொற்று பரவாமல் இருக்க போடப்பட்ட கவச உடையையும் கழற்றியுள்ளனர். அது மட்டுமன்றி பிணத்துடன் ஒரு சிலர் நெருங்கி உட்கார்ந்து கொண்டே கீழக்கரை வரை சென்றுள்ளனர். பிணத்தை கையால் எடுத்து கழுவியுள்ளனர். இறுதி ஊர்வலம் மற்றும் சடங்கில் தடையை மீறி ஆளும் கட்சி பிரமுகர்கள், எதிர்க்கட்சி பிரமுகர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அரசு தமிழக அரசு சிறுபான்மை அரசியல் லாபத்துக்காக தூய்மை உள்ளத்துடன் பாடுபடும் சுகாதாரத்துறையின் அத்தனை விதிகளையும் காலில் போட்டு மிதித்தது.

இந்த விவகாரத்தில் நடந்த அனைத்து சம்பவங்களும் திமுகவுக்கு மிக நன்றாக தெரியும், என்றாலும் இது சிறுபான்மையினர் விவகாரம் என்பதால் அவர்களும் அடக்கி வாசித்தார்களாம். இது எல்லாவற்றையும் விட மிக கொடுமை என்னவென்றால் தங்களை ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று ஓயாமல் கூறிக் கொள்ளும் தமிழக செய்தி ஊடகங்களும் திமுக, அதிமுக பின்னால் இருந்து ஜமால் இறப்பு விவகாரத்தில் அனைத்தையும் மறைத்து விட்டார்கள் என்பதுதான். இறுதி ஊர்வல நிகழ்ச்சியை ஒரு பத்திரிக்கைக்காரர் கூட ஒரு புகைப்படம் எடுக்க வில்லை என்றால் எங்கே செல்கிறது தமிழகம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

Source: https://www.opindia.com/2020/04/tamil-nadu-health-secretary-single-source-event-tablighi-jamaat-84-out-of-96-new-cases/

Similar News