திருவள்ளுவரை வைத்து ஓர் அரசியல் - அறமிழந்த தமிழக ஊடகவியலாளர்கள்!

திருவள்ளுவரை வைத்து ஓர் அரசியல் - அறமிழந்த தமிழக ஊடகவியலாளர்கள்!

Update: 2019-11-04 03:13 GMT

வள்ளுவர் எல்லா படங்களிலும் சம்மணம் போட்டு உட்கார்ந்திருப்பதால் அவர் சமணர் என்பதை தவிர அனைத்து வாதங்களையும்(ஆதாரமே இல்லாமல் தான்) நமது திராவிட கண்மணிகள் வைத்துவிட்டார்கள்.


சமீபத்திய விவாத போக்கை நீங்கள் கவனித்திருக்கக்கூடும்! நான் அதன் பின் உள்ள அரசியலை பேசுகிறேன். இக்கட்டுரையில்
மு.தெய்வநாயகம் என்பவரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். தமிழர்களின் கலாச்சாரத்தை கிறிஸ்தவ மதமாற்றத்திற்கு ஏற்ப திரித்து எழுதுவதையே தன் வாழ்நாள் லட்சியமாகக் கருதித் தொண்டாற்றியவர்(!). அவர் திருக்குறள் ஒரு கிறிஸ்தவ நூல் என்று நிறுவி விட்டதாக நினைத்து ஒரு புத்தகம் எழுதினார். அதற்கு சென்னைப் பல்கலைக்கழகம் அவருக்கு முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்தது.


இந்த புத்தகத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி தான் முன்னுரை எழுதியுள்ளார்(மேலும் இதுபற்றி விரிவாக அறிய அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் "உடையும் இந்தியா"நூலை வாசிக்கவும்)


நிற்க. இது பழைய கதை! இப்போது ஏன் இதை மீண்டும் சொல்ல வேண்டும்?


காரணம் திருவள்ளுவர் காவி உடை, திருநீறு பூசி இருப்பது போல் தமிழக பா.ஜ.க-வின் ட்விட்டர் கணக்கு ஒரு புகைப்படத்தை ட்வீட் செய்தது!




https://twitter.com/BJP4TamilNadu/status/1190502339242872832?s=20


இதற்கு வந்த/வரும் எதிர்வினைகள் கொஞ்ச நஞ்சமல்ல. திருக்குறளின் எந்த ஒரு அதிகாரத்தையும்(குறைந்தது 5 குறள்களைக்கூட) பின்பிற்ற முயலாத, திருவள்ளுவரை கிறிஸ்தவர்கள் தங்கள் மதமாற்ற நோக்கத்துக்காக உபயோகப்படுத்த முயலுபவர்களை தடுக்க வழியில்லாத கூட்டம் இப்போது ஒப்பாரி வைத்து தங்கள் hypocrisy-ஐ வெளிப்படுத்திக்கொண்டு இருக்கிறது. ஆனால், இப்போது பெரிதும் கொந்தளிப்பது தி.மு.க-வின் (un)official ஆதரவாளர்களான பத்திரிக்கையினர் தான். இவ்வளவு நாள் பா.ஜ.க வெறுப்பை மேல்பூச்சோடு பேசி வந்து மறைமுகமாக பேசி வந்த கூட்டம், அந்த ட்வீட் வெளிப்படுத்திய உண்மையை காண சகிக்காமல் எதையோ ட்ரெண்ட் பண்ணி அதில் திருப்தி கொள்கிறது.


ஏன் இப்போது தி.மு.க-விற்கு ஆதரவாக அவர்களே இறங்கக் காரணம் என்ன? தி.மு.க-வின் தொடர்ந்த இந்து வெறுப்பு பேச்சு தமிழர்கள் மத்தியில் உண்டாக்கிய எதிர்ப்பை தி.மு.க இப்போது தான் எதிர்கொள்ள ஆரம்பிக்கிறது. இந்து என்றால் திருடன் என்ற கலைஞரின் பேச்சுக்கு அப்போது எத்தனை மக்கள் எதிர்வினை செய்தார்களோ அதைவிட இருமடங்கு எண்ணிக்கை பெருகியுள்ளது. தி.மு.க ஆட்சிக்கட்டிலை தொட்டு இதோடு 8.5 வருடங்களாகிவிட்டது. எப்பாடுபட்டாவது மீண்டும் அரியனை ஏற வேண்டும் என்ற அதன் வெறிக்கு இடைத்தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் முட்டுக்கட்டை போட்டுள்ளனர். 


மேலும் 1967-ல் தான் ஆட்சிக்கு வந்ததும் அதுவரை திருநீறு பட்டையுடன் இருந்த வள்ளுவரை சர்மா என்ற ஓவியர் மூலம் கிறிஸ்தவ மதமாற்ற கோஷ்டிகளுக்கு பயன்படுமாறு அவருடைய பூணூல், திருநீறு படத்தை எடுத்து இப்போது பள்ளி நூல்களில் இருக்கும் படத்தை நிறுவியது. தொடர்ந்து இந்துக்களின் கலாச்சாரத்தை திரிபு வாதத்துக்கு உட்படுத்த கிறிஸ்தவ மதமாற்ற சக்திகளுக்கு ஆதரவாக மிகப்பெரிய அடித்தளத்தை அமைத்து கொடுத்தது.


இதையெல்லாம் நொறுக்கியது பா.ஜ.க பகிர்ந்த அந்த புகைப்படம். இனியும் என்ன செய்வது என அறியாமல் தன் பத்திரிக்கையாளர் அணியை களமிறக்கிவிட்டது தி.மு.க. அவர்களும் முதலாளி பேச்சைக் கேட்டு வாலை ஆட்டிக்கொண்டு இருக்கிறார்கள்! பத்திரிக்கை துறையின் அவமானம் இவர்கள். திருவள்ளுவர் இந்து இல்லை அவர் இந்துக் கடவுள்களளையும்(லட்சுமி, இந்திரன்) நம்பிக்கைகளையும்(ஏழு பிறப்பு) பற்றி எழுதியதை மூடி மறைத்து செக்யூலர் குல்லா போட நினைத்த அவர்களின் வேலையில் இப்போது மண்ணள்ளிப்போட்டுவிட்டது தமிழக பா.ஜ.க.


இவ்வளவு பேசுற இவர்கள் திருவள்ளுவர் ஒரு கிறிஸ்தவர் என்றும் தோமா பேச்சைக்கேட்டே திருக்குறள் எழுதியதாகவும் பாதிரியார்கள் ஒவ்வொரு வாரமும் சர்ச்களில் பேசும்போதும் எங்கே இருந்தார்கள்?


இனிமேல் இது போல் தமிழக பா.ஜ.க இறங்கி அடித்தால் மேலும் பல பத்திரிகையாளர் என்ற போர்வையில் திரியும் தி.மு.க கூலிகளை அடையாள காணலாம்.


அவர்தளின் கதறலை காண வாயப்பை நல்கிய தமிழக பா.ஜ.க ட்விட்டர் அட்மினுக்கு நன்றி!


Similar News