கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருக்கும் பழைய கட்டிடம் ஜெப கூடமாக மாற்றம்? : இந்து முன்னணி புகார்

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருக்கும் பழைய கட்டிடம் ஜெப கூடமாக மாற்றம்? : இந்து முன்னணி புகார்

Update: 2020-04-12 03:57 GMT

முதல்வரின் தனிப்பிரிவுக்கு இந்து முன்னணி குமரி மாவட்ட தலைவர் மிசா சோமன் புகார் அளித்துள்ளார் அதன் விவரம்:

இந்தியா நாடு முழுவதும் கொரனா ஊரடங்கு அமலில் இருக்கும் போது கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரானா நிவாரணப் பணிகளில் பல்வேறு தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த தொண்டர்கள் இரவு பகல் பார்க்காமல் உணவு வழங்குதலும் மற்றும் சுகாதார பணிகளில் முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகிறார்கள்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சுகந்தி ராஜகுமாரி இதையெல்லாம் மறந்துவிட்டு கொரானா மருத்துவ பணியில் கவனம் செலுத்துவதை விட அவர் சார்ந்திருக்கும் கிறிஸ்தவ மதத்தை பரப்புவதில் குறியாக இருக்கிறார்.


தற்போது மருத்துவக் கல்லூரி வளாகத்தில் புதியதாக ஜெபக்கூடத்தை ஏற்படுத்தி அதில் கிறிஸ்துவ ஜெப கூட்டம் நடத்துவதற்கான முயற்சியை செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. யார் எப்படி போனாலும் எந்த நிலை வந்தாலும் தன் சார்ந்த கிறிஸ்தவ மதத்தை பரப்ப வேண்டும் என்ற புத்தியுடன் செயல்படும் இந்தமருத்துவக் கல்லூரி முதல்வரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என இந்து முன்னணி குமரி மாவட்ட தலைவர் மிசா.சோமன் முதல்வரின் தனிபிரிவிற்கு அனுப்பிய புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.


ஏற்கனவே விஸ்வஹிந்து பரிஷத் காளியப்பன், பாரதிய ஜனதா கட்சி மாநில துணைத்தலைவர் எம்.ஆர்.காந்தி, நாஞ்சில்ராஜா ஆகியோர் மாவட்ட ஆட்சிதலைவருக்கு மனு அளித்ததின் அடிப்படையில் ஜெப கூடமாக மாற்றம் செய்யப்பட்ட கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டிடத்தில் புதிதாக வைக்க பட்ட கிறித்தவ மத அடையாள சின்னங்கள் அப்புறபடுத்தபட்டுள்ளன.

 



 


Similar News