ஜமைக்கா தலைநகர் கிங்ஸ்டன் சாலைக்கு அம்பேத்கர் பெயர்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறப்பு!

Update: 2022-05-18 13:57 GMT

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜமைக்காவுக்கு அரசு முறையாக சென்றடைந்தார். இந்த நாடுகளுக்கு இடையிலான நட்பு 60 ஆண்டுகளை எட்டியுள்ளதை தொடர்ந்து ஜனாதிபதி இப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

ஜமைக்காவுக்கு சென்ற ஜனாதிபதி ஜமைக்கா கவர்னர் ஜெனரல் பேட்ரிக் ஆலன் மற்றும் பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸை சந்தித்து இரண்டு நாடுகளின் நல்லுறவை வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.

மேலும், ஜமைக்கா தலைநகர் கிங்ஸ்டனில் அமைந்திருக்கும் சாலை ஒன்றிற்கு டாக்டர் அம்பேத்கர் பெயரை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சூட்டினார். அதற்கான பெயர் பலகையும் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதனை தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News