காவலர், செவிலியர், துப்புரவு பணியாளர் வேடமனிந்து - பொதுமக்களிடன் கொரோனா குறித்த விழிப்புணர்வு.!

காவலர், செவிலியர், துப்புரவு பணியாளர் வேடமனிந்து - பொதுமக்களிடன் கொரோனா குறித்த விழிப்புணர்வு.!

Update: 2020-04-20 11:38 GMT

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் கொரானா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள தமிழ் திரைப்பட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சங்கம் சார்பில் கொரோனா குறித்து விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தினர்.


புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மார்க்கெட் பகுதியில் மருத்துவர், காவலர், துப்புரவு பணியாளரை போன்று வேடம் அணிந்து பொது மக்கள் முன்னிலையில் முகக்கவசம் அணிய வேண்டும், கைகளை அடிக்கடி சுத்தப்படுத்து வேண்டும், தேவையில்லாமல் வெளியே போக வேண்டாமென பாட்டு பாடியும், நடனமாடியபடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பொதுமக்கள் முன்னிலையில் நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது அனைவரையும் கவர்ந்தது.

Similar News