முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.100 அபராதம் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அதிரடி.!

முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.100 அபராதம் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அதிரடி.!

Update: 2020-04-17 04:49 GMT

புதுச்சேரி சட்டப்பேரவையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில முதலமைச்சர் நாராயணசாமி புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 6 பேர் புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் ஒருவருக்கு இரண்டாவது முறையாக பரிசோதனை செய்யப்பட்டதில் கரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது. ஆகவே அவர் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

மாநிலத்தில் கரோனா தொற்று 6 பேர் என்பது இப்போது 5 பேர் என்று மாறியுள்ளது. அதே போல் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 4,150-ல் இருந்து 3,915-க குறைந்துள்ளது. படிப்படியாக கரோனா பாதிப்பு நம் மாநிலத்தில் குறைந்து வருகிறது.

கொரோனா பரிசோதனை டெஸ்ட் கிட்டுகள் நம் மாநிலத்தில் தேவையானவை இல்லை. சுமார் 4 ஆயிரம் பேருக்கு செய்கின்ற அளவில் இருக்கிறது. ஜிப்மர் மட்டும் அங்கீகரிக்கப்பட்டுள்ள காரணத்தால் நம்மால் வேகமாக பரிசோதனை செய்ய முடியவில்லை. மத்திய அரசு ஒரு நாளைக்கு 30 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யும் கிட்டை சீனாவில் இருந்து கொண்டு வந்துள்ளது.

மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்துக்கு தேவையான டெஸ்ட் கிட்டுகளை கொடுக்க வேண்டும். மக்கள் முகக்கவசம் அணியாமல் வெளியே செல்லக்கூடாது என்று தொடர்ந்து பல முறை வலியுறுத்தப்பட்டது

ஆனால் பலர் முகக்கவசம் அணியாமல் வருகின்றனர். எனவே முகக்கவசம் அணியாமல் வெளியே வருவோரிடம் இன்று முதல் ரூ.100 அபராதம் வசூலிக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வாகனங்களில் செல்லும்போது தனியாக செல்ல வேண்டும். இருவர் செல்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். தினமும் கடைக்கு சென்று பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

Similar News