புதுச்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் காற்றில் பறக்க விடப்பட்ட சமூக இடைவெளி.!

புதுச்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் காற்றில் பறக்க விடப்பட்ட சமூக இடைவெளி.!

Update: 2020-04-17 12:35 GMT

கொரானா வைரஸ் பரவுவதால் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு விதிமுறைகள் விதித்துள்ள நிலையில் வைரஸ் பரவுதலிருந்து தங்களை காத்துக் கொள்ள சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும், கைகளைக் கழுவ வேண்டும், முக கவசம் அணிய வேண்டும் உட்பட பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை எடுத்து வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரி, ஒதியன் சாலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமூக இடைவெளி பின்பற்றப்படாமல் நோயாளிகள் ஒருவருக்கு ஒருவர் முந்தி கொண்டு கூட்டமாக மருத்துவம் பார்த்தனர். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் ஏதேனும் உடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் காரணமாகவே வருகின்றனர்.


அவர்களுக்கு கொரானா அறிகுறியும் இருக்க வாய்ப்புள்ள நிலையில் இதுபோன்ற சூழல் நிச்சயம் அதிகப்படியான தொற்றை ஏற்படுத்த ஒரு காரணமாக அமையும். மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களைப் பாதுகாக்க வேண்டிய அரசின் சுகாதாரத் துறை அதன் கீழ் இயங்கும் ஒதியன் சாலை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களும், செவிலியர்களும், ஊழியர்களும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத பொதுமக்களின் செயலை கண்டு கொள்ளாமல் அலட்சியமாக பணிபுரிந்து வருகின்றனர்.


புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளி கோடு வரைந்து அதற்கு ஏற்றவாறு மக்களை அனுமதிக்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தும் சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல விதிமுறைகள் விதித்தும் அவற்றை செயல்படுத்தாத இது போன்ற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் இதுபோன்ற சூழல் இனி நடைபெறாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும் மக்கள் மீது அக்கறையுடன் மருத்துவர்களும் செவிலியர்களும் செயல்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Similar News