போராட்டம் என கூவிவிட்டு ராகுல்காந்தி திடீரென மர்ம முறையில் வெளிநாட்டு பயணம் : ‘அந்த மாதிரி’ நாடுகளுக்கு மட்டும் செல்வது ஏன் ? உலா வரும் நிலா தகவல்கள்.!

போராட்டம் என கூவிவிட்டு ராகுல்காந்தி திடீரென மர்ம முறையில் வெளிநாட்டு பயணம் : ‘அந்த மாதிரி’ நாடுகளுக்கு மட்டும் செல்வது ஏன் ? உலா வரும் நிலா தகவல்கள்.!

Update: 2019-10-31 06:10 GMT


ராகுல் காந்தி அவ்வப்போது திடீர்..திடீர் என முடிவெடுத்து தனிப்பட்ட முறையில் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வது வழக்கம். சில சமயங்களில் சொல்லாமல், கொள்ளாமல் பயணங்கள் மேற்கொள்வதும் உண்டு. மிகப் பொறுப்பான பதவிகளில் இருந்தும் இது வரை 3 க்கும் மேற்பட்டமுறை அவர் இவ்வாறு மர்மப் பயணங்கள் மேற்கொள்வது கட்சியினரை அவ்வப்போது முகம் சுளிக்க வைத்து வருகிறது.


கடந்த 2015 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக முக்கியப் பணியில் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் திடீர் என வெளி நாடு சென்ற அவர் கிட்டத்தட்ட 50 நாட்களுக்கும் மேல் காணாமல் போயிருந்தார். அவர் இருப்பிடம் தெரியாமல் காங்கிரஸ் தலைமை அலுவலகமே திணறிக் கொண்டிருந்தது. அனால் உண்மையில் அவர் கொலம்பியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் உல்லாச பயணங்களை மேற் கொண்டதாக செய்திகள் வெளியாகின. அந்த பயணங்களில் பல வெள்ளை அழகிகள் பங்கு கொண்டதாகவும் புகைப்படங்களுடன் செய்திகள் வெளிவந்தன..





கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் அலுவலகமும், உடல்நலம் சரியில்லாத சோனியாவும் பரபரப்பாக இயங்கிய நேரத்தில் கூட இவர் திடீர் பயணம் மேற்கொண்டார். இத்தாலிக்கு சென்று தனது பாட்டியை பார்க்கப் போகிறேன், அங்கு சென்று சில நாட்கள் அவருடன் தங்கியிருக்கப் போகிறேன் என்று டுவிட்டரில் பதிவு செய்து விட்டு கம்பி நீட்டிய அவர் இத்தாலியில் தான் இருந்தாரா அல்லது அங்கிருந்து வேறு எந்த நாட்டுக்கு சென்றார் என எவருக்கும் தெரியவில்லை. சில வாரங்கள் கழித்துதான் வந்தார்.


சமீபத்தில் நடந்து முடிந்த மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்ட சபை தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, பிரசாரம் துவங்கிய நிலையில், ராகுல், திடீரென வெளிநாடு சென்றார். அப்போது, அவர் கம்போடியாவுக்கு சென்றுள்ளதாக, காங்., மூத்த தலைவர்கள் மெல்லவும் முடியாமல், சொல்லவும் முடியாமல் தெரிவித்தனர். காரணங்கள் குறித்து எதையும் அவர்கள் தெரிவிக்கவில்லை. ஏனென்றால் அவர்களுக்கும் தெரியாது.


இப்போது நாட்டின் பொருளாதார சரிவுக்காக, மத்திய அரசை கண்டித்து, காங்கிரஸ் போராட்டம் நடத்தும் என ராகுல், சோனியா உததரவுப்படி காங்கிரஸ் அறிவித்திருந்த நிலையில், அக்கட்சியின் முன்னாள் தலைவரும், பிரதமர் பதவிக்கான நேரு குடும்ப வாரிசு என பேசப்படும் ராகுல், வெளிநாடுகளுக்கு சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.


ஆனால் அவர் எந்த நாட்டுக்கு சென்றுள்ளார் என, காங்., அறிவிக்கவில்லை. இது, கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு சிலர் அவர் தியானம் செய்ய இந்தோனேஷியா சென்றுள்ளதாக கூறுகின்றனர். இன்னொரு சிலர் அவர் தனிப்பட்ட முறையில் தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக கூறுகின்றனர். ஆனால் தாய்லாந்து, கம்போடியா, கொலம்பியா உட்பட சில நாடுகள்  ‘அந்த ஒருவிஷயத்துக்கு’ ரொம்ப பேமஸ் என கூறப்படுகிறது. அங்கு கட்டுப்பாடு இல்லாமல் பாதுகாப்புடன் சுதந்திரமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.





இதேபோல தற்போது திமுக தலைவராக உள்ள மு.க ஸ்டாலின் சென்ற 2௦௦6 ஆம் ஆண்டு தனது தந்தை தலைமையிலான ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்தார். அப்போது அவர் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் தனது நண்பர் ஒருவருடன் ரகசியமாக தாய்லாந்து பயணம் மேற் கொண்டதாகவும், இது குறித்து முதலமைச்சர் என்ற முறையில் கருணாநிதிக்கே கூட தெரிவிக்கவில்லை என்றும் புகார் எழுந்தது.


ஆனால் அவர் மீனம்பாக்க விமான நிலையத்தில் தாய்லாந்து நாட்டுக்கான விமானத்தில் ஏறும்போதுதான் யாரோ அவரது தந்தைக்கு தகவல் தெரிவித்தார்கள் என்றும் செய்திகள் வெளியாகின. எது எப்படியோ தாய் மண்ணின் கலாச்சாரங்களை மறந்து மர்மப் பயணங்கள் மேற்கொள்வது அவர்களை சார்ந்தவர்களையும், ஆதரவாளர்களையும் வாயடைக்க வைத்து வருகிறது என்பதே உண்மையாகும். இவர்கள் பிரதமர் மோடியின் அலுவல் ரீதியான பயணங்களை குறைகூறுவது வேடிக்கையாக உள்ளது.


Source:- https://www.toptamilnews.com/rahul-gandhi-m-k-stalin-thailand-tour


Similar News