லாக் டவுனில் ரஜினி, என்ன ஆச்சு அவருக்கு ?

லாக் டவுனில் ரஜினி, என்ன ஆச்சு அவருக்கு ?

Update: 2020-04-13 08:49 GMT

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் 'அன்னாத்த'. இப்படத்தின் படப்பிடிப்பு ஐம்பது சதவீதம் நிறைவடைந்து விட்ட நிலையில் தான் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வேறு இடங்களில் நடத்த வேண்டிய படப்பிடிப்பை இங்கேயே நடத்தி விடலாமா என்று ஆலோசித்து வந்ததாம் படக்குழு.

இதனைத் தொடர்ந்து தயாரிப்பு தரப்பினை தொடர்பு கொண்ட ரஜினி, மூன்று மாதங்களுக்குப் படப்பிடிப்பு நடத்துவதைப் பற்றி யோசிக்க வேண்டாம் என்றும், 100 சதவீதம் நிலைமை சரியான பின்னர் படப்பிடிப்பை மேற்கொள்ளலாம் எனக் கூறிவிட்டாராம். சில வருடங்களுக்கு முன்னர் ரஜினியின் உடல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு பெரும் போராட்டத்திற்குப் பின்னர் உடல்நிலை சீரடைந்து வீடு திரும்பினார் ரஜினி. இதனால் அவரது உடல்நிலையை அதிக அக்கறை எடுத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ள ரஜினி லாக்டவுனை பின்பற்றி வருகிறாராம். 

Similar News