30 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை செய்யும் ஒரு லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்ஸ் 9ம் தேதி தமிழகம் வந்தடையும்..

30 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை செய்யும் ஒரு லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்ஸ் 9ம் தேதி தமிழகம் வந்தடையும்..

Update: 2020-04-07 07:41 GMT

சென்னை தலைமைச் செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் "30 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை செய்யும் ரேபிட் டெஸ்ட் கிட்ஸ் 'ஒரு லட்சம் கிட்டுக்கள்' கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும், அது வரும் 9ம் தேதி தமிழகம் வந்து விடும் என தெரிவித்தார்.

முக கவசங்கள், உடல் பாதுகாப்பு கவசங்கள், 95 ரக முக கவசம் ஆகியவை தேவையான அளவு கையிருப்பில் உள்ளதாகவும், நாள்தோறும் இரண்டு லட்சம் முகக் கவசங்கள் மற்றும் 20,000 உடல் பாதுகாப்பு கவசங்கள் வாங்கிக் கொண்டு இருப்பதாகவும், மேலும் வென்டிலேட்டர்கள் தேவைப்படக்கூடிய காரணத்தினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2500 வென்டிலேட்டர்கள் வாங்க கொள்முதல் ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறினார்.

விரைவாக பரிசோதனை செய்யும் ரேபிட் டெஸ்ட் கிட்டுக்கள் 9ம் தேதி கிடைத்தவுடன் விரைவாக வேகமாக ஒரு லட்சம் பேருக்கு பரிசோதனை நடத்த முடியும், 10ம் தேதி அனைத்து மாவட்டத்திற்கும் அனுப்பி பரிசோதனை மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

Similar News