தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண 5 ஆண்டுகளில் ரூ.3.5 லட்சம் கோடி நிதி! பிரதமர் மோடி அதிரடி!!

தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண 5 ஆண்டுகளில் ரூ.3.5 லட்சம் கோடி நிதி! பிரதமர் மோடி அதிரடி!!

Update: 2019-10-19 06:49 GMT


தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் விவசாயிகள் தண்ணீர் பிரச்னையை எதிர்கொள்ளாமல் இருக்க, அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.3.5 லட்சம் கோடி செலவு செய்ய உள்ளோம்- மோடி


ஹிசார் நகரில் நடந்த, மற்றொரு தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: நமது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் விவசாயிகள் தண்ணீர் பிரச்னையை எதிர்கொள்ளாமல் இருக்க, அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.3.5 லட்சம் கோடி செலவு செய்ய உள்ளோம். நமது விவசாயிகள், பருவமழையை மட்டும் சார்ந்திருப்பதை மாற்ற நடவடிக்கை எடுப்போம். தற்போது கிராமங்களில் பயன்படுத்தப்படும், பழைய நீர்மேலாண்மை திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும். வீட்டு உபயோக நீரை, மறுசுழற்சி செய்து விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும். இதற்கான திட்டம், நாட்டில் 2024க்குள் கொண்டு வரப்படும் என நம்புகிறோம்.


பாகிஸ்தான் விரும்பும் வகையில் அறிக்கை வெளியிடுவது ஏன் என்பது குறித்து காங்கிரஸ் விளக்க வேண்டும். என்னை விமர்சிக்க காங்கிரஸ் வெளியிடும் அறிக்கைகள், போலி தகவல்கள், மொழிகள் ஆகியவற்றை, தங்கள் தரப்பு வாதமாக, உலகம் முழுவதும் வலிமையாக பாகிஸ்தான் முன்னெடுத்து வருகிறது. காங்கிரஸ் மற்றும் பாகிஸ்தான் இடையே என்ன மாதிரியான புரிதல் உள்ளது. இதற்கான விடையை மக்கள், தேர்தலில் அளிக்க வேண்டும் என்றார்.


This is a Translated Article From MONEY CONTROL


Similar News