கறுப்பர் கூட்டத்திற்கு தி.மு.க-வின் ஆர்.எஸ். பாரதி கண்டனம்..!! ஹிந்துக்களின் வாக்கு வங்கியை பார்த்து பயப்படுகிறதா தி.மு.க?

கறுப்பர் கூட்டத்திற்கு தி.மு.க-வின் ஆர்.எஸ். பாரதி கண்டனம்..!! ஹிந்துக்களின் வாக்கு வங்கியை பார்த்து பயப்படுகிறதா தி.மு.க?

Update: 2020-07-18 11:13 GMT

கறுப்பர் கூட்டம் என்ற யூட்யூப் சேனல் மூலம் இந்து மதக் கடவுள்கள், கோட்பாடுகள் மற்றும் இதிகாச, புராணங்களை இழிவுபடுத்தி பொய்யான கருத்துக்களை பரப்பி திராவிட இயக்கம் மற்றும் கம்யூனிஸ்ட் சிந்தனை கொண்ட சிலர் தமிழகத்தில் நிலவும் அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சித்து வந்தனர். ஆபாச புராணம் என்ற தலைப்பில் இந்து மத புராணங்களைப் பற்றி ஆபாசமாக விமர்சித்து வந்த இவர்கள் கந்தசஷ்டி கவசத்தைப் பற்றியும் அருவருக்கத்தக்க வகையிலான கருத்துக்களை வெளியிட்டனர். இது தற்போது பலராலும் தண்டிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பகுத்தறிவு என்ற பெயரில் ஆபாச எண்ணங்களுடன் ஹிந்து மத தெய்வங்களை இழிவுபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாத ஹிந்துக்கள் விழித்துகொண்டு போராட துவங்கிவிட்டனர். இந்த போராட்டங்களை சற்றும் எதிர்பார்த்திராத திராவிட கட்சிகள் தற்போது பின்வாங்க துவங்கிவிட்டனர் போல் தெரிகிறது. கறுப்பர் கூட்டத்திற்கு எதிராக தி.மு.க எம்.பி ஆர்.எஸ் பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். தி.மு.க-வில் ஒரு கோடி ஹிந்துக்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார். தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலினையும் கறுப்பர் கூட்டத்தையும் சம்பந்தபடுத்துவதை ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். 

பகுத்தறிவு என்ற பெயரில் ஹிந்து மதத்தை மட்டும் இழிவுபடுத்தும் பெரியாரிய கம்யூனிச இயக்கங்களுக்கு எதிராக ஹிந்துக்கள் ஒன்று திரண்டு ஹிந்து வாக்கு வங்கி உருவாகுவதை கண்டு தி.மு.க பயந்துவிட்டதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. 

Similar News