ஆன்மீகத்தில் அமாவசைக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்? ஆச்சர்யமூட்டும் தகவல்கள்!

ஆன்மீகத்தில் அமாவசைக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்? ஆச்சர்யமூட்டும் தகவல்கள்!

Update: 2020-04-10 02:29 GMT

அமாவாசையுடன் தொடங்கும் மாதத்தை சுக்களாபக்ஷம் என்று கூறுவதுண்டு. இந்த நாளை இந்துக்கள் "தர்ப்பணம்" செய்வதற்கு உகந்த நாளாக கருதுகின்றனர். அமாவாசை என்பது இந்துக்களுக்கு ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. நிலவானது ஒரு மாதத்தில் 15 நாட்கள் தேய்ந்தும் 15 நாட்கள் வளர்ந்தும் வரும். சூரிய ஒளியால் பூமியின் நிழல் நிலவை படிப்படியாக மறைத்து விலகுவதால் தேய் பிறை வளர்பிறை என்று நிலவின் வடிவம் ஒளி மிகுந்து முழு வடிவத்துடனும் 15 நாட்கள் கழித்து முழுதாக மறைந்து ஒன்றுமே தெரியாமலும் இருக்கும். 

அதாவது இறந்துபோன ஆத்மாக்களை அமைதிப்படுத்துவதற்கான நாளாக இது கருதப்படுகிறது. முழு நிலவு பௌர்ணமி என்றும், நிலவு முழுதாக மறைக்கப்பட்ட நாள் அமாவாசை என்றும் அழைக்க படுகிறது. அமாவாசை அன்று நிலவு இல்லாமல் போவதில்லை மாறாக நிலவு மறைக்கப்படுகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அமாவாசையுடன் தொடங்கும் மாதத்தை சுக்களாபக்ஷம் என்று கூறுவதுண்டு.

இந்தியாவின் பிக பிரபலமான பண்டிகையான தீபாவளி இந்த மஹாளய அமாவாசையில் தான் வருகிறது. இந்த நாட்களில் விரதம் இருப்பது நம் மனதையும் உடலையும் எண்ணங்களையும் சீர் படுத்தி இறைவனை நோக்கி அழைத்து செல்லும். அமாவாசை நாள் அதீத சக்திவாய்ந்த நாளாக பொதுவாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஜனவரி-பிப்ரவரி மாதம் வரும் மௌனி அமாவாசை யும், செப்டம்பர்-அக்டோபர் மாதம் வரும் மஹாளய அமாவாசையும் மிக மிக சக்தி வாய்ந்தவை.

இந்த நாளில் தர்ப்பணம் செய்வது இறந்தவர்களின் ஆன்மாவை திருப்திப்படுத்தும் என்று நம்பபடுகிறது. எந்த நல்ல காரியங்களை தொடங்குவதாக இருந்தாலும் இந்தியாவில் இன்றும் அமாவாசை நாளை தேர்ந்தெடுப்பது வழக்கமாக உள்ளது. இது போக வருட தொடக்கத்தில் வரும் முதல் அமாவாசை அதாவது தை அமாவாசை மிக முக்கியமானது இந்த நாளில் சூரியன் வடக்கு திசை நோக்கி திசையில் நகர்கிறது இது "உத்தராயண காலம்" என்று சொல்லப்படும் இந்த காலம் தேவர்கள் உலகத்தில் அதிகாலை பொழுதாக கருதப்படுகிறது இந்த காலத்தில் வரும் அமாவாசை நாள் பூமியை அபிரிமிதமான சக்தியின் மூலம் நிறைக்கும்.

Similar News