மேடையில் மட்டுமல்ல ட்விட்டரிலும் உளறிய ஸ்டாலின்! உளறல் அப்டேட்.!

மேடையில் மட்டுமல்ல ட்விட்டரிலும் உளறிய ஸ்டாலின்! உளறல் அப்டேட்.!

Update: 2019-11-15 05:24 GMT

நான் கலைஞரின் மகன், ஆக வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என பேச மாட்டேன் ஆதாரத்துடன் தான் பேசுவேன் என தி.மு.க தலைவர் ஸ்டாலினின் வசனம் தமிழகம் முழுவதும் பிரபலம்,அது மட்டுமல்ல அவருக்கு பழமொழி நாயகன் என நெட்டிசன்கள் அழைப்பது வழக்கம். ஏனென்றால் அவரின் பழமொழிகள் அவ்வாறு இருக்கும்.எடுத்துக்காட்டாக பூனை மேல் மதில் யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே
என நிறைய பழமொழிகள் பிரபலம்! மேடையில் பேட்டியில் இவர் அடிக்கடி உளறுவர் பெயர்களை மாற்றி சொல்வார்…


இப்போது அப்டேட் ஆகி உள்ளார் ஸ்டாலின் ட்விட்டரில் உளர ஆரம்பித்து விட்டார்


மாநில தேர்தல் ஆணைய செயலர் மாற்றத்தை ஆணையர் மாற்றம் எனக்கருதி தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவிட்டது திடீர் குழப்பத்தை ஏற்படுத்தியது. சிறிது நேரத்திற்கு பின் அந்த பதிவு நீக்கப்பட்டு திருத்தம் செய்யப்பட்டது.


தமிழகத்தில் மாநில தேர்தல் ஆணையராக திரு.ஆர்.பழனிசாமி உள்ளார் இவர் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி. தேர்தல் ஆணைய செயலராக S.பழனிசாமி இருந்தார். இவர் பேரூராட்சி இயக்குனராகவும் செயல்பட்டு வந்தார்.இந்நிலையில் S.பழனிசாமி பேரூராட்சிகள் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் ஆணைய செயலராக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திரு.சுப்ரமணியன் நியமிக்கப்பட்டார். தேர்தல் ஆணைய செயலர் மாற்றம் செய்யப்பட்டார் இது குறித்து ஸ்டாலின் தனது கண்டன அறிக்கை வெளியிட்டார் அது ட்விட்டரில் பதிவு செய்தார்





அந்த அறிக்கையில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமியை திடீரென மாற்றியிருப்பது கண்டனத்திற்குரியது. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் பணிகளை செய்தவரை மாற்றியது ஏன்? விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விசுவாசமாக பணியாற்றியதற்காக விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மாநில தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாரா? இந்த ஏற்பாடு உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போடவா அல்லது உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வினர் ஒட்டுமொத்தமாக தில்லுமுல்லுகளில் ஈடுபடவா? இவ்வாறு அதில் பதிவிடப்பட்டது.


செயலரை ஆணையர் என மாற்றி அறிக்கை வெளியிட்டார் ஸ்டாலின் இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. பின் எப்பவும் போல் நெட்டிசன்கள் கலாய்க்க ஆரம்பித்துவிட்டார்கள் இதன் பிறகுதான் ஸ்டாலினுக்கு தெரிந்துள்ளது இது செயலர் தான் ஆணையர் இல்லை என்று சிறிது நேரம் கழித்து அந்தப் ட்விட்டர் பதிவுகள் நீக்கி ஆணையருக்கு பதிலாக செயலர் என மாற்றி ட்விட்டர் பதிவு செய்தார்.


Similar News