மேயருடன் கொலையுண்ட வேலைக்கார பெண்ணிற்கு அஞ்சலி செலுத்தாத ஸ்டாலின்! “ஏழை என்பதால் வரவில்லை” என்று பொதுமக்கள் குமுறல்!!

மேயருடன் கொலையுண்ட வேலைக்கார பெண்ணிற்கு அஞ்சலி செலுத்தாத ஸ்டாலின்! “ஏழை என்பதால் வரவில்லை” என்று பொதுமக்கள் குமுறல்!!

Update: 2019-07-25 06:52 GMT


நெல்லை மாநகராட்சியின் முதல் மேயராக இருந்தவர் உமாமகேஸ்வரி (62). தி.மு.க.வை சேர்ந்த உமா மகேஸ்வரியின் கணவர் முருக சங்கரன் (72) நெடுஞ்சாலை துறையில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.


இவர்களது வீடு நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரி அருகே உள்ள ரோஸ் நகரில் இருக்கிறது. அவர்களின் வீட்டில் மேலப்பாளையம் ஆசிரியர் காலனியை சேர்ந்த மாரியம்மாள் (37) என்பவர் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்தார்.





நேற்று முன்தினம் (23 - ஆம்தேதி), முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன், வேலைகார பெண் மாரி ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். வீட்டுக்குள் நுழைந்த மர்மக் கும்பல், மூவரையும் கம்பியால் தாக்கியும், கத்தியால் குத்தியும் கொடூரமாகக் கொலை செய்ததுள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.





இந்த நிலையில், உமா மகேஸ்வரி குடும்பத்தினரை நேரில் சந்தித்து துக்கம் விசாரித்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின், உமா மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் முருகசங்கரன் ஆகியோரின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் புறப்பட்டு சென்றுவிட்டார்.


ஆனால் இதே சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட ஏழையான வேலைக்காரப் பெண் மாரியின் வீட்டிற்கு சென்று ஆறுதல் சொல்லக்கூட செல்லவில்லை. 





ஏற்கனவே மாரியின் கணவர் இறந்து விட்ட நிலையில், தன் மூன்று மகள்களையும், வீட்டு வேலை செய்து படிக்க வைத்துவந்தார் மாரி. அவரது மகள்கள் வீரலட்சுமி, ஜோதிலட்சுமி, ராஜேஸ்வரி ஆகியோர் திருநெல்வேலியில் உள்ள ஒரு பள்ளியில், 12, 10, 8 - ஆம் வகுப்புகள் படித்து வருகின்றனர்.


தந்தை இல்லாத நிலையில், தாயும் படுகொலை செய்யப்பட்டிருப்பதால், மூன்று மகள்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. 


கொலையான உமா மகேஸ்வரியின் வீட்டுக்கு அருகிலேயே மாரியின் வீடும் இருக்கிறது. ஆனால், தி.மு.கவினர் யாரும் அவருடைய வீட்டுக்குச் சென்று அந்தக் குழந்தைகளுக்கு ஆறுதல் தெரிவிக்கவில்லை. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-


தி.மு.க.வினர் எல்லோரும் உமா மகேஸ்வரி வீட்டுக்குத்தான் சென்கின்றனர். அதில் தவறில்லை. ஆனால் எந்த சம்பந்தமும் இல்லாமல் உயிரிழந்த மாரியின் வீடும், பக்கத்திலேயே இருக்கும்போது அங்கும் சென்று ஒரு வார்த்தை துக்கம் விசாரித்திருக்கலாம். இதுவே, மாரியும் பணக்காறியாக இருந்திருந்தால், ஸ்டாலில் வந்து அஞ்சலி செலுத்திருப்பார்?


தமிழக அரசாவது இதை கவனத்தில் கொண்டு, கொல்லப்பட்ட அப்பாவியான மாரியின் குழந்தைகளுக்கு நிதி உதவி அளிக்க முன்வர வேண்டும். மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டும்.


இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


“மேயர் வீட்டிற்கு அஞ்சலி செலுத்த வந்த ஸ்டாலின், அவர்களுடன் சேர்த்து படுகொலை செய்யப்பட்ட என் மகளின் சாவுக்கு ஆறுதல்கூட சொல்ல வரவில்லை. நாங்கள் பணம் இல்லாத ஏழைகள் என்பதால் ஸ்டாலின் வரவில்லையா?” என மாரியின் தாயார் வசந்தி தெரித்தார். 


Similar News