கருப்பர் கூட்டமாக மாறி Standup காமெடி ஷோ நடத்திய தி.மு.க-வினர்! இது இன்றைய ஸ்பெஷல்!

கருப்பர் கூட்டமாக மாறி Standup காமெடி ஷோ நடத்திய தி.மு.க-வினர்! இது இன்றைய ஸ்பெஷல்!

Update: 2020-07-21 13:29 GMT

"என்னதான் ஆச்சு நம்ம தி.மு.க-க்கு?" என்று சீனியர் உடன்பிறப்புகளும், இதெல்லாம் தேவையா என ஜூனியர் உடன்பிறப்புகளும், காச கொடுக்குறாங்க என்ன பண்றது குட்டிக்கரணம் போட வேண்டியதுதான் என அல்லக்கைகளும் கலந்துக் கொள்ள, காமெடி களேபரமானது இன்றைய தி.மு.க மின் கட்டண போராட்டம்.

போராட்டங்களுக்கு பெயர் போன திராவிட முன்னேற்ற கழகம் இன்றைய தேதியில் போராட்டம் என்ற பெயரில் ஸ்டாண்டப் காமெடி நடத்திக்கொண்டிருப்பது வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் விஷயம். அதிலும் பீகாரி பி.கே-யாரின் வருகைக்கு பிறகு உள்ள மரியாதையும் போச்சுடா என்பது போல் கூத்துகள் நிறைவேறுகின்றன. அநேகமாக பி.கே என்று அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர் தன் அரசியல் அரங்கின் வித்தைகளை தி.மு.க-வை வைத்தே பரிசோதிக்கிறார் என்று தோன்றுகிறது. அது புரியாமல் காசையும் கொடுத்துவிட்டு அவர் அசைக்கும் கோலுக்கு தி.மு.க'வினரும் ஆடுகின்றனரோ என்ற சந்தேகமும் வருகிறது.

தி.மு.க-வின் அறிவிப்பு படி, இன்றைய போராட்டம் "மின்கட்டண கொள்ளைக்கு எதிரான அறப்போர்" என பெயரெல்லாம் சூட்டி கருப்பு நிற ஆடையணிந்து போராடுவதுதான். அதாவது தமிழக அரசு மின் கட்டணம் என்ற பெயரில் கொள்ளை அடிப்பதாகவும், கொரோனோ ஊரடங்கு காலத்தில் மக்களை வஞ்சிப்பதாகவும் குறை கூறி ஆளும் மாநில அரசை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டது இன்றைய நிகழ்வு. இதில் என்னவென்றால் தமிழக முதல்வரே மின் கட்டணம் என்பது ஊரடங்கு காலத்தில் எடுக்கப்படாத ரீடிங் அளவையும் சேர்த்து கணக்கிடப்படுள்ளது, மின்துறை அதனையும் கணக்கில் பாதியாக கணக்கில் எடுத்துக்கொள்ளும்படி அறிவுருத்தப்பட்டிருக்கிறது என அறிவிப்பையும் குடுத்திருக்கிறார். மேலும் இது சம்மந்தமான குறைகள் இருப்பின் நிவர்த்தி செய்யப்படும் என்ற வாக்குறுதியையும் அளித்திருக்கிறார்.

தி.மு.க இதனை துளியும் மதிக்காமல் திருப்போரூர் கள்ளதுப்பாக்கி/மான்வேட்டை, செங்கல்பட்டு இளைஞரணி அமைப்பாளர் பெண்ணை கற்பழித்து கொன்ற விவகாரம், கறுப்பர் கூட்ட கந்த சஷ்டி விவகாரம் என தி.மு.க'வின் இமேஜ் மேலும், மேலும் டேமேஜ் ஆனதை மறைக்கவும், மடைமாற்றவும் உப்புசப்பில்லாத விஷயத்தை எடுத்துக்கொண்டு இன்று காமெடி ஷோ செய்திருக்கிறது தி.மு.க.

அவ்வளவு குறை இருந்தால் அவர்களின் அறிவாலயம் மற்றும் ஸ்டாலின் அவர்களின் வீட்டு இரண்டின் கரண்ட் பில்லை காமித்து எங்கே தவறு நடந்துள்ளது என காமிக்கட்டுமே உடன்பிறப்புகளே!

Similar News