இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் ஒற்றுமையின் சிலை : டைம்ஸ் பத்திரிகையின் உலகின் சிறந்த 100 இடங்கள் பட்டியலில் இடம்பெற்று சாதனை
இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் ஒற்றுமையின் சிலை : டைம்ஸ் பத்திரிகையின் உலகின் சிறந்த 100 இடங்கள் பட்டியலில் இடம்பெற்று சாதனை
டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலகின் 100 சிறந்த இடங்களின் பட்டியலில் படேலின் சிலை, மும்பையில் உள்ள சோஹோ ஹவுஸ் ஆகியன இடம்பெற்றுள்ளன.
நடப்பாண்டிற்கான உலகின் சிறந்த நூறு இடங்கள் என்ற பட்டியலை டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவில் ஒற்றுமையின் சிலை என்ற பெயரில் குஜராத்தில் கடந்த ஆண்டு நிறுவப்பட்ட சர்தார் வல்லபாய் படேலின் சிலை மற்றும் மும்பையிலுள்ள சோஹோ ஹவுஸ் உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, படேல் சிலை டைம்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், டைம்ஸ் பத்திரிக்கையின் உலகின் 100 சிறந்த இடங்களில் ஒற்றுமை சிலையும் இடம்பெற்றுள்ள செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் மிக அதிகபட்சமாக ஒரே நாளில் 34,000 பேர் இந்த சிலையை பார்த்துச் சென்றுள்ளனர். புகழ்பெற்ற சுற்றுலா தலங்களின் பட்டியலில் இந்த சிலையம் இணைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.