வைகை ஆற்றை கங்கை நதிபோல் சீரமைக்க நினைக்கிறேன் - தேனியில் பிரதமர் மோடி காட்டிய அதிரடி..!

வைகை ஆற்றை கங்கை நதிபோல் சீரமைக்க நினைக்கிறேன் - தேனியில் பிரதமர் மோடி காட்டிய அதிரடி..!

Update: 2019-04-13 08:46 GMT

தேனி மாவட்டம் கரிசல் விளக்கு பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று தேனி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ., - அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். தமிழில் பேசி அவர் உரையை துவக்கினார்.


அப்போது பேசிய அவர், 2014ம் ஆண்டு நாட்டின் வளர்ச்சிக்காக உங்களுக்கு வாக்குறுதி அளித்தேன். இந்தியா தற்போது வரலாற்றில் முக்கிய இடம் பிடித்து. இதனை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் என்னை வெறுக்கிறார்கள். இந்தியாவின் வளர்ச்சியை திமுக, காங்., ஏற்கவில்லை. தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். 2ஜி விவகாரத்தில் சிறை சென்றவர்கள் திமுக தலைவர்கள். அப்போது காங்.,ஐ கடுமையாக விமர்சித்தது திமுக. மக்களை தவறாக வழிநடத்த திமுக, காங்., முயற்சி செய்து வருகின்றன.


பாஜக ஆட்சியில் வளர்ச்சி பணிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். நீண்ட நாள் கோரிக்கைகள் இதன் மூலம் நிறைவேறும். மதுரை எய்ம்ஸ் மூலம் தேனி மாவட்ட மக்கள் பயனடைவார்கள். மத்திய அரசின் திட்டம் மூலம் தமிழக விவசாயிகள் பயனடைந்துள்ளனர். வாக்கு வங்கி அரசியலுக்காக தண்ணீர் நிறுத்தப்படுகிறது. வைகை ஆற்றை கங்கை நதிபோல் சீரமைக்க நான் நினைக்கிறேன். விவசாயிகளுக்காக ஏதும் செய்யாதவர்கள் இந்த பகுதி விவசாயிகளுக்காக நீலி கண்ணீர் வடிக்கிறார்கள். இது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா தொகுதி. இந்த மண்ணில் காங்., வேட்பாளர்கள் எதுவும் செய்ய முடியாது. இந்த மண்ணில் அவர்கள் கட்சியில் போட்டியிட ஆள் இல்லாததால் வெளி மாவட்டத்தில் இருந்து வேட்பாளரை நிறுத்தி உள்ளனர்.
வரும் ஏப்.,18 அன்று தேசிய முற்போக்கு கூட்டணி- அதிமுக கூட்டணிக்கு ஓட்டளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். புதிய இந்தியாவை கட்டமைக்கும் இயக்கத்தில் நம்மை இணைத்துக் கொள்வோம்' என்று பேசியுள்ளார்.


Similar News