ஆப்கன்: அரசு ஊடகத்தில் பெண் செய்தி வாசிப்பாளர்க்கு பதிலாக நியமிக்கப்பட்ட தலிபான்கள் !
ஆப்கன்-தலிபான்கள் தற்போது அரசு ஊடகங்களில் செய்தி வாசிப்பாளராக நியமிக்கப்பட்டார்கள்.
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தலிபான்கள், பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். அவர்களுடைய ஆட்சியில் பெண்களுக்கு எதிரான கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும் என்ற அச்சம் உலகத்தை கவலைக் கொள்ளச் செய்துள்ளது. குறிப்பாக அவர்களுக்கு எதிராக எந்த ஒரு செய்தியை சொல்லும் ஊடகத்துறையை அவர்கள் தற்பொழுது முடக்கி உள்ளார்கள். இதற்காக அரசு ஊடகத்தில் வேலை செய்த பெண் ஊழியர்களை தாலிபான்கள் பணி நீக்கம் செய்துள்ளனர். மேலும் அந்தப் பதவியில் தற்போது தலிபான்கள் இடம் பெற்றுள்ளார்கள்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தலிபான் அமைப்பு, இஸ்லாமிய ஷரியத் சட்டத்தின்படி பெண்களுக்கு உரிமை வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். அதே போல மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளில் மட்டும் வேலை செய்ய பெண்களுக்கு உரிமை வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். ஆனால், ஆப்கானிஸ்தான் அரசு ஊடகத்தில் பணியாற்றிய பெண் செய்தி வாசிப்பாளரை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதற்கு பதிலாக தலிபான் செய்தியாளர் பணியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பெண் செய்தி வாசிப்பாளர் கூறுகையில், இனி அடுத்த தலைமுறைக்கு இங்கு எந்த வேலையும் இல்லை, 20 வருடங்களாக என்ன சாதிக்கப்பட்டதோ அது எல்லாமே வீணாக போபப்போகிறது என்றும், தலிபான்களிடம் எந்த மாற்றமும் இல்லை என உருக்கமாக தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே முக்கியமான பணிகளில் குறிப்பாக தலிபான்கள் இடம்பெறுவது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Image courtesy: wikipedia