தன்னைத்தானே கடவுளாக சித்தரித்துக்கொண்ட தெலுங்கானா முதல்வர் - கோவில் தூண்களில் கட்சி சின்னம், சந்திரசேகர் ராவின் முகம் : இந்திய அளவில் அதிர்வலையை கிளப்பிய சம்பவம்.!

தன்னைத்தானே கடவுளாக சித்தரித்துக்கொண்ட தெலுங்கானா முதல்வர் - கோவில் தூண்களில் கட்சி சின்னம், சந்திரசேகர் ராவின் முகம் : இந்திய அளவில் அதிர்வலையை கிளப்பிய சம்பவம்.!

Update: 2019-09-09 13:29 GMT

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் முகம் மற்றும் அவரது கட்சி சின்னம் ஆகியவை கோவில் தூண்களில் பொறிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வெடித்துள்ளன.


தெலுங்கானா மாநிலம் யாதகிரிகுட்டா பகுதியில் உள்ள புகழ்பெற்ற லட்சுமி நரசிம்ம கோவில் தூணில், அரசின் அடையாளங்களான மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவின் உருவம், தெலுங்கானா மாநில அரசின் பல்வேறு திட்டங்களுக்கான அடையாளங்கள், ஐதராபாத் நகரின் அடையாளமாக திகழும் சார்மினார் கட்டிடம் போன்ற அத்துமீறல்களுடன் கூடிய சிற்பங்கள் செதுக்கப்பட்ட கல் தூண்கள் கோவில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் சின்னமான காரும் கோவில் தூண்களில் பொறிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.


முன்னதாக இந்த கோவிலுள்ள தூண்களில், மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோரின் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தன்னை கடவுளாக சித்தரிக்க முடியாது எனக் கூறியுள்ள பஜ்ரங் தள் அமைப்பினர் அமைப்பினர், இந்த சுவர்சிற்பங்களை உடனடியாக நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனார்.



Similar News