தீவிரவாதிகள் கையில் கொரோனா வைரஸ் சென்றால் நிலை இன்னும் விபரீதமாகிவிடும் - ஐ.நா தலைமைச் செயலாளர் விடுத்த கவலை!

தீவிரவாதிகள் கையில் கொரோனா வைரஸ் சென்றால் நிலை இன்னும் விபரீதமாகிவிடும் - ஐ.நா தலைமைச் செயலாளர் விடுத்த கவலை!

Update: 2020-04-10 08:19 GMT

கரோனா வைரஸ் சுகாதார, ஆரோக்கிய நெருக்கடி சார்ந்த விஷயம் என்றாலும் அதன் தாக்கம் மேலும் சிலபல அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என ஐநா தலைமைச் செயலாளர் அந்தோனியோ கட்டெரெஸ் கவலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், பயங்கரவாதம் என்ற அச்சுறுத்தல் இன்னமும் உயிர்ப்புடன்தான் இருக்கிறது. கரோனா மீது அனைத்து அரசுகளும் கவனம் செலுத்தும் வேளையில் பயங்கரவாதிகள் இதனைத் தங்கள் தாக்குதலுக்கான வாய்ப்பாகப் பார்க்கும் அபாயம் உள்ளது. 

கரோனாவுக்கு எதிரான திட்டமிடலிலும், மருத்துவத்திலும் வெளிப்பட்டுள்ள பலவீனங்கள், எதிர்காலத்தில் உயிரி பயங்கரவாதத் தாக்குதலுக்கான சாளரமாக அமைந்து விடக்கூடிய அபாயமுள்ளது. பயங்கரவாதிகள் விஷக் கிருமிகளை உலகம் முழுதும் பரவச்செய்யும் வாய்ப்பை இது உருவாக்கிவிடும் என்று தெரிவித்துள்ளார்.

"இது வன்முறை அதிகரிப்பதற்கும் அழிவுகரமான நிகழ்வுகளுக்கும் வழிவகுக்கும். ஏற்கனவே  நடந்துகொண்டிருக்கும் போர்களை மேலும் சிக்கலானதாக மாற்றும்.  மேலும் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை சிக்கலாக்கும்" என்று கூறினார்.

கொரோனா வைரஸின் பேரழிவின் விளைவுகள் மற்றும் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான உலகளாவிய முயற்சிகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வன்முறையை இடைநிறுத்துமாறு, அனைத்து தரப்பினரையும் வலியுறுத்தி மார்ச் 23 அன்று, ஐ.நா பொதுச்செயலாளர் உலகளாவிய போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News