மதமாற்ற எதிர்ப்பு - பொய்யாக வன்கொடுமை புகார் அளித்த மதபோதகர்.!

ஏழை மக்களிடம் நிதி உதவி செய்வதாகக் கூறி வலையில் வீழ்த்தி மத மாற்றம்.

Update: 2021-02-17 20:25 GMT

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கொத்தபள்ளம் என்ற ஊரில் Believers’ Eastern Church என்ற கிறிஸ்தவ சபையைச் சேர்ந்தவர்கள் மதம் மாறச் சொல்லி மிரட்டுவதாகவும், மாறாவிட்டால் வன்கொடுமைச் சட்டத்தில் புகார் அளித்து துன்புறுத்துவோம் என்று அச்சுறுத்துவதாகவும் கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர். இந்த திருச்சபையைச் சேர்ந்த ஆனந்த் பால் என்ற மத போதகர் ஏழை மக்களிடம் நிதி உதவி செய்வதாகக் கூறி வலையில் வீழ்த்தி மத மாற்றம் செய்வதாக கிராமத்தினர் கூறியுள்ளனர்.

மத போதகர் ஆனந்த் பால் கிறிஸ்தவ மதத்துக்கு மாற சம்மதம் தெரிவிப்பவர்களுக்கு மாதம் தோறும் ₹5,000 ரூபாய் தருவதாகவும் அனுமதி எதுவும் பெறாமல் கிராமத்தினரின் எதிர்ப்பை மீறி சட்டவிரோதமாக சர்ச் கட்ட முயல்வதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சட்டவிரோத செயலுக்கு ஆதரவாக முன்னாள் டி.ஐ.ஜி உட்பட கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மத போதகரை ஊக்குவிப்பதாக கூறப்படுகிறது. 

 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராமத்தினரை வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் புகார் அளித்து விடுவோம் என்று மிரட்டியதாக கிராமத்தினர் புகார் அளித்துள்ளனர். மேலும் தங்களை ஆபாச வார்த்தைகளில் திட்டுவதாகவும் கிராமத்தில் நிலவும் அமைதியைக் குலைத்து மத மற்றும் சாதி ரீதியான மோதலை ஏற்படுத்த முயல்வதாகவும் கிராமத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

கிராம மக்கள் அளித்துள்ள புகாரின் படி கடந்த ஜனவரி 24 அன்று மத போதகர் ஆனந்த் பாலின் மத மாற்ற மற்றும் சட்ட விரோதமாக சர்ச் கட்டும் செயல்களை எதிர்த்த கிராமத்தினரை வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் புகாரளித்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதையடுத்து கிராமத்தினர் ஆனந்த் பால் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மத போதகர் ஆனந்த் பாலும் கிராமத்தினர் மீது வன்கொடுமை சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது.

எனினும் கிறிஸ்தவராக மதம் மாறிய பின்னர் பட்டியல் இனத்தவர் என்ற சலுகை செல்லாது என்பதால் மத போதகர் ஆனந்த் பால் பட்டியல் இனத்தவர் இல்லை என்றும் அவரது புகாரின் பேரில் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் கிராம மக்கள் தங்களது புகார்க் கடிதத்தில் கூறியுள்ளனர். 

மதபோதகர் ஆனந்த் பால் தான்‌ ஒரு கிறிஸ்தவர் என்றும் கடந்த 10 ஆண்டுகளாக மத போதனை செய்து வருவதாகவும் ஒப்புக் கொண்ட பின்னரும் அவர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் அளித்த புகாரை பதிவு செய்தது தவறு என்று சுட்டிக்காட்டியுள்ள கிராம மக்கள் ஆனந்த் பாலின் எஸ்.சி சாதிச் சான்றிதழை ரத்து செய்யவும் அதேபோன்று கிராமத்தில் கிறிஸ்தவ மதத்தை தழுவிய பின்னரும் எஸ்.சி சான்றிதழ் வைத்திருப்பவர்களின் சான்றிதழ்களையும் ரத்து செய்யவும் கோரியுள்ளனர்.

பண பரிமாற்றத்தில் முறைகேடு செய்ததாக Believer’s Eastern Church மீது அமலாக்கத் துறையும் வருமான வரித்துறையும் விசாரணை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News