மக்களவையில் விவாதம் இன்றி ரூபாய் 1.50 இலட்சம் கோடி துணை மானிய கோரிக்கை !

மக்களவையில் ரூபாய் ஒரு லட்சத்து 48 ஆயிரம் கோடி கணக்கான துணை மானிய கோரிக்கை விவாதம் இன்றி நிறைவேறியது

Update: 2023-03-22 13:45 GMT

நாடாளுமன்ற மக்களவையில் மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ்சவுத்ரி கடந்த 13ஆம் தேதி துணை மாநில கோரிக்கைகளை தாக்கல் செய்தார். நடப்பு நிதியாண்டில் ரூபாய் ஒரு லட்சத்து 48,000 கோடி கூடுதல் செலவினத்திற்கு சபையில் ஒப்புதலை அவர் கூறினார் . இதில் உரமானியத்துக்கு மட்டும் ரூபாய் 36 ஆயிரத்து 325 கோடியும் மாநிலங்களுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.டி இழப்பீட்டு நிதியத்துக்கு ரூபாய் 33 ஆயிரத்து 506 கோடியும் செலவிடப்படும். நேற்று எதிர்க்கட்சிகளின் கூச்சல் குழப்பத்திற்கு இடையே துணை மானிய கோரிக்கை நிறைவேறியது. மக்களவை கேள்வி நேரத்தில் மத்திய உள்துறை இணை மந்திரி நித்தியானந்தராய் கூறியதாவது:-


கடந்த இரண்டு ஆண்டுகளில் புதுடெல்லி மாவட்டத்தில் எம்.பி.க்கள் வீடுகள் மீது நான்கு தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன . அவை தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு வழக்குகளில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது போன்ற தாக்குதல்களை தவிர்க்க அவரவர் பகுதிகளில் விழிப்புடன் இருக்குமாறு அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார் . மற்றொரு கேள்விக்கு நித்தியானந்தராய் அளித்த பதில் வருமாறு :-


நாடு முழுவதும் கடந்த 2010-ஆம் ஆண்டு நக்சலைட் வன்முறை சம்பவங்கள் , 96 மாவட்டங்களில் 465 போலீஸ் நிலையங்களில் பதிவாகி இருந்தன. ஆனால் 2022 ஆம் ஆண்டு 45 மாவட்டங்கள் உட்பட 176 போலீஸ் நிலையங்களில் மட்டுமே பதிவாகியுள்ளது. எனவே நக்சலைட் ஆதிக்க நிலப்பரப்பு 77 சதவீதம் குறைந்துள்ளது. நக்சலைட் வன்முறையால் பலியாகும் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் எண்ணிக்கை 90 சதவீதம் குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.





 


Similar News