சோளிங்கர் கோவிலில் பெருமாளுக்கு நடைபெறும் அபிஷேகத்தை தடுத்து நிறுத்தும் கிறிஸ்தவ ஊழியர் - தொடரும் அநியாயம்.!

சோளிங்கர் கோவிலில் பெருமாளுக்கு நடைபெறும் அபிஷேகத்தை தடுத்து நிறுத்தும் கிறிஸ்தவ ஊழியர் - தொடரும் அநியாயம்.!

Update: 2020-04-20 11:30 GMT

தமிழகத்தில் உள்ள வைணவ கோவில்களில் மிகவும் பிரபலமான கோவில் சோளிங்கர் மலையில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோவில். இங்கு அரசின் ஊரடங்கை பின்பற்றி கடந்த ஒரு மாத காலமாக பெரிய விழாக்கள், பொது மக்கள் கூடும் ஆன்மீக நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப்படவில்லை. என்றாலும் சுவாமிகளுக்கு தினசரி நடைபெறும் பூஜை, அபிஷேக ஆராதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் சென்ற வியாழக்கிழமை பெருமாளுக்கு மிகவும் உகந்த நாள் ஆகும். அன்று சிரவணம் என்கிற திருவோண நட்சத்திரம் என்பதால் பெருமாளுக்கு காலையில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் அன்றைய நாளில் நடைபெறும் சிறப்பு அபிஷேகத்தை கோவில் நிர்வாக அலுவலகத்தில் தலைமை எழுத்தராக பணியாற்றும் கிறிஸ்தவரான அந்தோணி என்பவர் திட்டமிட்டு நிறுத்தி அதன் மூலம் ஏராளமான பக்தர்களின் மனதை புண் படுத்திவிட்டார் என கூறப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டை கோவில் பட்டாச்சார்யர்களில் மூத்தவரான திருவாளர். ராஜா சாமி அவர்களும் ஒப்புக் கொண்டுள்ளார். வேண்டு மென்றே அபிஷேகத்துக்கான பொருள்கள் எதையும் அந்தோணி அளிக்காமல் அன்றைய நிகழ்ச்சியை அவர் திட்டமிட்டு தடுத்து நிறுத்திவிட்டார் என்றும் அவர் வேறு மதத்தை சேர்ந்தவர் என்பதால் தனது வெறுப்பை காண்பிக்கும் வகையில் இங்கு அடிக்கடி செயல்படுவதாக கூறினார்.

மேலும் சென்ற வெள்ளிக் கிழமை நடக்க வேண்டிய பூஜையையும் திட்டமிட்டு நிறுத்தி, காலதாமதம் செய்ததால் அதிகாலை நடக்க வேண்டிய பூஜை, புனஸ்காரங்கள் காலை 11 மணிக்கு நடைபெற்றதாக கூறினார். இது தொடர்பாக உதவி ஆணையர் மோகனசுந்தரத்திடம் தெரிவித்தும் அவரும் இந்த விஷயத்தை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் அக்கறை இல்லாமல் இருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.

எனவே இந்து கோவில் விஷயங்களில் வெறுப்பை கடைப்பிடித்து இந்து பக்தர்களின் உள்ளத்தை நோகடிக்கும் இந்த அதிகாரிகளை உடனடியாக வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும், குறிப்பாக இந்து அறநிலையத்துறை சார்பில் திருக் கோவில்களில் பணி செய்யும் வேறு மதத்தை சேர்ந்த சேர்ந்தவர்கள் அனைவரையும் நீக்க வேண்டும் என சோளிங்கர் பக்தர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசுக்கும், மூத்த அதிகாரிகளுக்கும் புகார் அளிக்கப் போவதாகவும் கூறியுள்ளனர்.       

Similar News