எங்கள் சமூகத்தை மட்டுமே குறி வைத்து தாக்குகிறார்கள் என புலம்புபவர்கள், இந்த 2 சம்பவங்களையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.!

எங்கள் சமூகத்தை மட்டுமே குறி வைத்து தாக்குகிறார்கள் என புலம்புபவர்கள், இந்த 2 சம்பவங்களையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.!

Update: 2020-04-10 07:16 GMT

கொடுமையான கொரொனா வைரசின் பிடியில் சிக்கி முன்னேறிய நாடுகளில் கூட பலியானவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1 லட்சத்தை நெருங்குகிறது. இந்த நிலையில் ஜனவரி 2 ம் வாரத்தில் இருந்தே இந்தியா உஷாராகிவிட்டதால் இந்தியாவில் இன்னும் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. மருத்துவ பணியாளர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து இரவு பகலாக போராடி வரும் நிலையில் டெல்லியில் தடையை மீறிய நடைபெற்ற ஒரு சமய மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றதால் நிலைமை இன்னும் பீதியை கிளப்பி வருகிறது.

இந்த நிலையில் சமய மாநாட்டை கூட்டியவர்களின் செயல் மன்னிக்க முடியாதது என பொறுப்புள்ள பல பிரபல பத்திரிக்கைகளே கருத்து தெரிவித்தன. அவர்கள் அதில் பங்கேற்ற அப்பாவிகளை குறை கூறவில்லை. நோய் தற்செயலாக அவர்களை அண்டிவிட்டது, என்றாலும் அவர்களில் சிலர் பொறுப்பற்ற முறையில் பரிசோதனைகளுக்கு உட்படாமல் முரண்டு பிடித்ததால் சமூக ஊடகங்களின் கண்டனத்துக்கு உள்ளானார்கள்.

இந்த நிலையில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த சிலர் தங்கள் சமூகத்தை மட்டுமே குறி வைத்து தாக்குகிறார்கள் என்று சமூக ஊடகங்களில் புலம்பி வருகின்றனர். அவர்கள் கீழ்கண்ட 2 சம்பவங்களை தொடர்பு படுத்தி பார்த்தால் சில உண்மைகள் தெரிய வரும்.

சென்ற மார்ச் 22 ந்தேதி சுய ஊரடங்கு மேற்கொள்ளப்பட்ட நாளில் தமிழகத்தில் மிகவும் பிரபலமான மூத்த நடிகர் விசு வயது மூப்பாலும், உடல்நலமின்றியும் இயற்கையான வகையில் காலமானார். மிகப்பெரிய ஜாம்பவனானான அவருடைய இறுதி சடங்கு நிகழ்ச்சிகளில் அரசின் கட்டுப்பாட்டுக்கேற்ப 20 க்கும் மேற்பட்டவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. அந்த குறைந்த நபர்களும் சமூக இடைவெளியை கடைபிடித்தார்கள், இறுதி யாத்திரையும் அரசு கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு மிக எளிமையாக நடைபெற்றது. காரணம் நம்மால் இந்த சமூகத்துக்கு எந்த தீமையும் உண்டாகிவிடக் கூடாது என பொறுப்புடன் ஒரு பெருங்கூட்டம் நடந்து காட்டியது.

ஆனால் இன்னொரு பக்கம் பாருங்கள்..

கீழக்கரையை சேர்ந்த ஜமால் என்கிற பீலி ஜமால் (70). துபாய் நாட்டில் இருந்து திரும்பி வந்ததும் மூச்சுத் திணறலால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 5 நாட்கள் சிகிச்சை பலனில்லாமல் சென்ற 2 ம் தேதி இறந்தார். அவர் இறந்த பிறகே வந்த இரத்த மாதிரியில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் ஏற்கனவே நோய் பற்றிய உண்மைகளை அவரது குடும்பத்தார் மறைத்ததுடன் அரசின் எச்சரிக்கையை மீறி அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்றுள்ளனர்.

WHO நெறிமுறைப்படி ஜமாலின் உடலில் போர்த்தியிருந்த பிளாஸ்டிக் கவசப் பையை எச்சரிக்கையை மீறி அகற்றி பிணத்தை கைகளால் தொட்டு கழுவியுள்ளனர். மேலும் இந்த இறுதி நிகழ்ச்சிகளில் போலீசாரின் தடை உத்தரவை மீறி 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இதனால் ஜமாலின் மகன்கள் மீது தொற்று நோய்கள் சட்டம், தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டம், கூட்டம் கூடியதற்காக உள்ளூர் கிராம நிர்வாக அலுவலரால் அளிக்கப்பட்ட புகார் போன்ற வழக்கு தொல்லைகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

அது மட்டுமல்லாமல் அந்த இறுதிச் சடங்கில் பங்கேற்ற ராமநாதபுரம் எம்.எல்.ஏ முன்னாள் அமைச்சர் எம்.மணிகண்டன் உட்பட 200 பேர் தற்போது கொரோனா சோதனையின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதெல்லாம் தேவையா?

ஒரு சமூக நன்மைக்காக ஒரு அரசு உத்தரவை, ஒரு அறிவியல் விழிப்புணர்வை, சமயத்தின் பெயரை சொல்லிக் கொண்டு அத்துமீறி நடக்கும் இந்த நபர்கள் துபாயிலும், சவுதியிலும் இது போல செய்ய முடியுமா? அல்லது அங்குள்ள குடிமக்கள் இது போன்று நடந்து கொள்கிறார்களா?

உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதால்தான் இந்த சாபங்களா .. இங்கு யாரும் யாரையும் வெறுக்கவில்லை. ஆனால் வெறுப்பு உண்டாக்கும் வகையில் யாரேனும் நடந்து கொண்டால் அவர்களை கண்டியுங்கள், அவர்களுடன் சேர்ந்து மேலும் அச்சுறுத்தல் வேண்டாம்.. இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள் ஏன் சிலரின் தாக்குதலுக்கு நாம் ஆளாகிறோம் என்று..

Similar News