பாகிஸ்தானிற்கு உளவு பார்த்த யாகுப் உள்ளிட்ட 3 பேர் கைது!

பாகிஸ்தானிற்கு உளவு பார்த்த யாகுப் உள்ளிட்ட 3 பேர் கைது!

Update: 2019-08-04 03:46 GMT

ஹரியானாவில் ஹிசாரில் உள்ள, ராணுவ மையத்தில், கட்டுமானப் பணிகள் நடந்தது. இதற்கான ஒப்பந்தம் ஒரு தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்தது.அந்த நிறுவனத்தில் பனி புரிந்த மூவரின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டது.


இதையடுத்து, அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் அதிர்ச்சிகரமான தகவல்களை போலீசாரிடம் தெரிவித்தான் ஒருவன். ராணுவ மையம் குறித்த தகவல்கள், வீரர்களின் நடவடிக்கை உள்ளிட்ட தகவல்களை, பாகிஸ்தானைச் சேர்ந்த, ஏஜென்ட் ஒருவருக்கு, அனுப்பியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.அவர்களுடைய செல்போன்களில், ராணுவ நடவடிக்கைகள் பதிவுகள், 'வீடியோ'க்கள் இருந்தன.


மேலும், பாகிஸ்தானில் உள்ள ஏஜென்ட்டுடன், 'வாட்ஸ்ஆப்' செயலி மூலம், வீடியோ அழைப்பு செய்து பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .மூவரையும் கைது செய்த போலீசார், தொடர்ந்து விடிய விடிய விசாரித்து வருகின்றனர்.


இதற்கிடையே, பஞ்சாப் மாநிலம், பெரோஸ்புர் மாவட்டத்தில், இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில், சுற்றித் திரிந்தவரை, எல்லை பாதுகாப்புப்படையினர் கைது செய்தனர். விசாரணையில், அவர், பாக்.,கின் தோபா தேக் சிங் மாவட்டத்தைச் சேர்ந்த, யாகுப், 38, என, தெரியவந்துள்ளது. உளவு பார்ப்பதற்காக அவர் வந்துள்ளாரா என்பது குறித்து, விசாரணை நடந்து வருகிறது.


Similar News