அமெரிக்காவில் புலிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் புலிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-04-06 10:40 GMT

உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 9637 பேர் உயிரிழந்துள்ளனர், நியூயார்க் நகரில் மட்டும் 3500 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் அமெரிக்காவில் புலிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புரோன்ஸ் உயிரியல் பூங்காவில் 4 வயது பெண் புலிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அந்தப் புலியின் வளர்ப்பாளர்க்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரின் மூலமாக புலிக்கு பரவியிருக்கலாம் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஹாங்காங்கில் இரண்டு நாய்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது உலகத்தில் முதன்முறையாக விலங்குகளுக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக கூறப்படுகிறது.

Similar News