எனர்ஜியோடு இருக்க எளிமையான டிப்ஸ் சில..

எனர்ஜியோடு இருக்க எளிமையான டிப்ஸ் சில..

Update: 2020-04-06 02:58 GMT

தடைகள் தகர்க்க......

  • நீங்கள் இன்னும் பயணத்தையே "துவங்காத" பட்சத்தில், இலக்குகள் தூரம் இருந்தாலும், பக்கம் இருந்தாலும் உங்களால் சென்று சேரவே முடியாது.
  • வாழ்க்கையின் மீதும், அடுத்தவர்களின் மீதும் புகார்களை சொல்ல கடைசி நாள் "நேற்று" என்பதை நினைவில் கொள்வோம்.
  • எப்போதும் வாய்ப்புக்காக காத்திருங்கள்..... உத்திரவாதங்களுக்கு அல்ல.
  • தொடர் தோல்விக்கு பின் மீண்டு எழுவதும், மீண்டும் எழுவதும் - உண்மையான வெற்றி.
  • உலகின் மிகச்சிறந்த "நல்ல நேரமாக" கருதப்படுவது : "இன்று, இப்பொழுது"
  • உங்கள் அனுமதியின்றி, உங்கள் நேரத்தை யாராலும் வீணாக்க முடியாது.
  • உங்களையும், உங்கள் வெற்றிகளையும் மற்றவர்களால் தற்காலிகமாக மட்டுமே தடுத்த நிறுத்த முடியும். நிரந்தரமாக அல்ல.
  • பிரச்சனையில் இருந்து தப்பிக்க மிகச்சிறந்த வழி, அதற்கு தீர்வு காண்பது மட்டுமே.
  • வாழ்வின் சிறந்த பாடம் - "எடுப்பவர்கள்" தோற்கிறார்கள். "கொடுப்பவர்கள்" வெல்கிறார்கள்
  • நாம் செய்யும் தவறுகளால் வெற்றிகள் தொலையலாம், நம் முயற்சிகள் அல்ல.

பணியில் சிறக்க......

  • தீர்வுகளை கண்டறியாமல், வெறும் பிரச்சனைகளோடு, ஒருபோதும் உங்கள் மேலதிகாரியின் முன் நிற்க்காதீர்கள்.
  • நீங்கள் அதிக நேரம் உழைப்பது பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போவதன் காரணம் உழைப்பை விடவும், அது தரும் முடிவுகள் முக்கியமானதாக கருதப்படுவதால்!
  • உங்கள் யோசனைகளை மறக்காமல் எழுதி வைத்துக்கொள்ளுங்கள். மிக எளிதில் தொலையும் பேனாவை போல் அதுவும் நம் சிந்தையில் இருந்து தொலைந்துவிட கூடும்
  • உங்களோடு பணியாற்றுபவர்களுக்கு உறுதுணையாக இருங்கள். உங்களுக்கான நேரம எப்போது வரும் என்பதை யாராலும் கனிக்க முடியாது..!
  • மற்றவர்களின் வேலையை அங்கீகரிப்பதும், பாராட்டுவதும் உங்களுக்கு இரண்டு மடங்காக திரும்ப வரும்.
  • வாரயிறுதியில் வேலை செய்வதை காட்டிலும், வார நாட்களில் சற்று நேரத்தை நீட்டித்தாவது உங்கள் பணிகளை முடித்துவிடுங்கள். காரணம் இது போன்ற சம்பவங்கள் நீங்கள் கடின உழைப்பாளி என்ற பிம்பத்தை கொடுப்பதை விடவும், உங்கள் உழைக்கும் ஆற்றல் குறைவு என்ற எண்ணத்தை அதிகம் தரக்கூடும்.
  • எப்போதும் எதையும் "இது என்னுடைய வேலையல்ல" என்று ஒதுக்காதீர்கள். வாய்ப்புகள் எதிலும் இருக்கலாம்
  • உங்களுடைய பலத்தையும், திறனையும் நன்றாக ஆய்ந்து தெரிந்து கொள்ளுங்கள். சரியான சந்தர்ப்பம் கிடைக்கையில் வாய்ப்புகளை வசமாக்குங்கள்
  • நீங்கள் எடுத்து கொள்ளும் செயலில் துவக்கத்தை விடவும் முடிவு மிக கூர்மையாக கவனிக்கப்படுகிறது என்பதை உணர்ந்துகொள்ளூங்கள். குத்துசண்டை விளையாட்டில் சொல்வது போல்..."ஆரம்பம் தோய்வாக இருந்தாலும் இறுதியில் வலிமையோடு முடித்திடுங்கள்"

Similar News