திருப்பூரில் ஆதரவற்றோருக்கு சமைத்த உணவை பிடுங்க திட்டம் போட்ட தி.மு.க நிர்வாகி - 130 சாப்பாட்டை லஞ்சமாக கேட்ட சோகம்!

திருப்பூரில் ஆதரவற்றோருக்கு சமைத்த உணவை பிடுங்க திட்டம் போட்ட தி.மு.க நிர்வாகி - 130 சாப்பாட்டை லஞ்சமாக கேட்ட சோகம்!

Update: 2020-04-16 09:47 GMT

ஆதரவற்றோருக்கு உணவு சமைத்து வழங்க முன்வந்த சேவா பாரதி அமைப்பினரிடன் 130 சாப்பாட்டை திமுக நிர்வாகி லஞ்சமாக கேட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆதரவற்றோர் மற்றும் தொழிலாளர்களுக்கு தேவையான அத்தியவாசிய பொருட்கள் மற்றும் உணவு பொட்டலங்களை சேவா பாரதி அமைப்பினர் வழங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் சேவா பாரதி அமைப்பினர், அங்காளம்மன் கோவில் மண்டபத்தில் உணவு சமைக்கப்பட்டு வருகிறது. சமைக்கப்படும் உணவுகள் கணக்கம்பாளையம், ஈட்டி வீரம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஆதரவற்றோருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அங்காளம்மன் கோவில் மண்டபத்தில் உணவு சமைக்கக் கூடாது என பெருமாநல்லூர் ஊராட்சி துணை தலைவராக இருக்கும் திமுக கிளை செயலாளர் வேலுசாமி, பிரச்சனை செய்வதாக சேவா பாரதி அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், 130 சாப்பாடு கொடுங்கள் என நெருக்கடி கொடுத்துள்ளார்.

இதனை ஏற்க மறுத்ததால், கோவில் மண்டபத்தில் சமைத்து வந்த சேவா பாரதி அமைப்பினர் மற்றும் பாஜகவினரை  கோவில் நிர்வாகத்திற்கு நெருக்கடி கொடுத்து காலி செய்ய வைத்து விட்டார் திமுக கிளை செயலாளர் வேலுசாமி. 

Similar News