உடான் திட்டம் மூலம் நடந்த அதிசயம் - இந்தியாவில் 73 விமான நிலையங்கள்!

உடான் திட்டத்தின்கீழ் ஜனவரி 2023 வரை 73 விமான நிலையங்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

Update: 2023-02-14 01:30 GMT

உள்நாட்டு விமானப் போக்குவரத்தை அதிகரிக்கவும், விமானப் பயணங்களுக்கான கட்டணங்களைக் குறைக்கும் நோக்கிலும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் 2016 அன்று அக்டோபர் மாதம் உடான் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. சந்தைத் தேவை அடிப்படையிலான இந்தத் திட்டத்தில் விமான நிறுவனங்கள் தங்களுக்கேற்ற வழித்தடங்களை தேர்வு செய்து, ஏலத்திற்கு விண்ணப்பித்து, விமானப் போக்குவரத்தை செயல்படுத்துகின்றன.


இந்தத் திட்டத்தின்கீழ், மார்ச் 2023 வரையிலான காலக்கட்டத்தில் 73 விமான நிலையங்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இவற்றில் 9 ஹெலிகாப்டர் தளங்களும், 2 நீர்வழி ஏரோட்ரோம்களும் அடங்கும். பயன்பாட்டில் இல்லாத 100 விமான நிலையங்கள், ஹெலிபேட்கள் மற்றும் நீர் ஏரோட்ரோம்களை 2024 ஆம் ஆண்டுக்குள் உடான் திட்டத்தின்கீழ், புதுப்பித்து மேம்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை உடான் திட்டத்தின்கீழ், சேலம் விமான நிலையம் 2018 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்தத் தகவலை சிவில் விமானப் போக்குவரத்து துறை இணையமைச்சர் வி கே சிங், மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News