உக்ரைன் போர்: இந்தியர்கள் விசா இல்லாமல் போலந்துக்கு வரலாம்!

Update: 2022-02-27 12:52 GMT

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் கடந்த 4வது நாளாக ஆக்ரோஷமான தாக்குதலை நடத்தி வருகிறது. முப்படையுடன் போர் நடத்தி வருவதால் உக்ரைனில் வசிப்பவர்கள் உயிர்களை காப்பாற்றிக்கொள்ள ரயில் நிலைய சுரங்கப்பாதைகள் மற்றும் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

அதே போன்று அங்குள்ள இந்தியர்கள் உட்பட பலர் வெளிநாட்டினர் ஒவ்வொருவராக அண்டை நாடுகளை நோக்கி சென்று வருகின்றனர். அது போன்று வருபவர்கள் உரிய விசா இருந்தால் மட்டுமே அண்டை நாடுகள் வரவேற்கும். இதனால் இந்தியர்கள் உட்பட பலர் கலக்கம் அடைந்திருந்தனர். இதற்கிடையில் ருமேனியா, போலந்து வழியாக இந்தியர்களை மத்திய வெளியுறவுத்துறை மீட்டு விமானம் மூலம் டெல்லிக்கு அனுப்பி வருகிறது. தொடர்ந்து விமானங்களை இந்திய அரசு உக்ரைன் அண்டை நாடுகளுக்கு அனுப்பி மீட்பு பணியில் ஈடுப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உக்ரைனில் இருந்து வரும் இந்தியர்கள் விசா இல்லாமல் போலந்து நாட்டிற்கு வரலாம். அவர்களை தங்கள் நாடு வரவேற்கும் என்று போலந்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த தகவலை இந்தியாவுக்கான போலந்து நாட்டின் தூதர் ஆடம் புராகோவ்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார்.

Source: Daily Thanthi

Image Courtesy: Twiter

Tags:    

Similar News