இந்திய ராணுவத்திடம் சரணடைந்த உல்பா தீவிரவாத இயக்க துணை தளபதி.!

இந்திய ராணுவத்திடம் சரணடைந்த உல்பா தீவிரவாத இயக்க துணை தளபதி.!

Update: 2020-11-12 17:56 GMT

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒரு பெரிய வெற்றியாக மேகாலயா - அசாம் - பங்களாதேஷ் எல்லையில் இந்திய இராணுவத்தின் உளவு அமைப்புகளால் செயல்படுத்தப்பட்ட விரைவான மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் மூலம் வடகிழக்கு இந்திய பயங்கரவாத அமைப்பான உல்பாவின் தலைவர் திரிஷ்டி ராஜ்கோவா தனது கூட்டாளிகளான வேதாந்தா, யாசின் அசோம், ரோப்ஜோதி அசோம் மற்றும் மிதுன் அசோம் ஆகிய நான்கு பேருடன் சரணடைந்து உள்ளனர். அவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள நிலையில் இவர்களை சரணடையச் செய்தது முக்கியத்துவம் வாய்ந்த செயலாக கருதப்படுகிறது.

உல்பா தீவிரவாதிகள் குறிப்பிட்ட பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ராணுவத்தினர் கடந்த 9 மாதங்களாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதன் பயனாக இவர்கள் அனைவரும் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்துள்ளனர்.

அசாம் மாநிலத்தின் உல்பா தீவிரவாத அமைப்பில் இருந்து வந்த இவர்கள் பல ஆண்டுகளாக தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இருந்து வந்துள்ளனர். இவர்கள் சரணடைந்ததை தொடர்ந்து வடகிழக்கு இந்திய தீவிரவாத அமைப்புகளுக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டு வருகிறது. மேலும் அந்தப் பகுதியில் அமைதி நிலவுவதற்கான சாத்தியங்கள் ஏற்பட்டுள்ளன என்று பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்த தீவிரவாத அமைப்பில் தலைவருக்கு அடுத்த நிலையில் ‌இருந்த ராஜ்கோவா தற்போது ராணுவ உளவுத்துறையின் காவலில் உள்ளார். அவர் அசாமிற்கு கொண்டு வரப்படுகிறார் என்று கூறப்படுகிறது. இவர் உல்பா அமைப்பின் தலைமை தளபதி பரேஷ் பருவாவின் நம்பிக்கைக்குரியவர் என்றும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர் என்றும் என்று நம்பப்படுகிறது.

ராஜ்கோவா இதுநாள் வரை வங்கதேசத்தில் பதுங்கி இருந்தார் என்றும் கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பு தான் மேகாலயா மாநிலத்திற்குள் நுழைந்தார் என்றும் கூறப்படுகிறது.
 

உல்பா தீவிரவாத அமைப்பு அசாமில் செயல்பட்டு வரும் ஒரு வடகிழக்கு இந்திய தீவிரவாத அமைப்பு. இந்த அமைப்பை 1990 ஆம் ஆண்டு மத்திய அரசு தடை செய்தது. அசாம் மாநிலத்திற்கு விடுதலை வேண்டும் என்பது இவர்களின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது.

முன்னர் அசாமின் நிதி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் அசாமின் வடகிழக்கு பகுதியில் உள்ள உல்பா அமைப்பு தொடர்பான பிரச்சனையில் தீர்வு காணவும் அந்த பகுதியில் அமைதியினை கொண்டு வரவும் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Similar News