இந்தியாவுக்கு தலை வணங்குகிறோம் - சரணடைந்த ஐக்கிய நாடுகள் சபை : புகழ்ந்து தள்ளும் பொது செயலர் ஆண்டனியோ குட்டரோஸ்!

இந்தியாவுக்கு தலை வணங்குகிறோம் - சரணடைந்த ஐக்கிய நாடுகள் சபை : புகழ்ந்து தள்ளும் பொது செயலர் ஆண்டனியோ குட்டரோஸ்!

Update: 2020-04-18 13:11 GMT

மலேரியாவிற்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த அமெரிக்கா முடிவு செய்தது. இந்த மாத்திரைகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது. இந்த மருந்தை உற்பத்தியில் உலகளவில் முன்னிலையில் இருக்கும், இந்தியா, முன்னர், ஏற்றுமதிக்கு தடை விதித்திருந்தது.

தொடர்ந்து மனிதநேய அடிப்படையில், நட்பு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடிவு செய்தது. அமெரிக்கா, பிரேசில், இஸ்ரேல், இலங்கை, மாலத்தீவு, வங்கதேசம், பூடான், ஆப்கன், நேபாளம் மியான்மர், ஜாம்பியா, டோமினிக்கல் குடியரசு, டமாஸ்கர்,உகாண்டா, புர்கினா பாசோ, மாலி, காங்கோ, எகிப்து, அர்மீனியா, கஜகஸ்தான், ஈக்வடார், ஜமைக்கா, சிரியா, உக்ரைன், சாத், ஜிம்பாப்வே, பிரான்ஸ், ஜோர்டான், கென்யா, நெதர்லாந்து, நைஜீரியா, ஓமன் மற்றும் பெரு உள்ளிட்ட 55 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. இதற்காக உலக நாடுகள் இந்தியாவிற்கும், பிரதமர் மோடிக்கும் நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலர் ஆண்டனியோ குட்டரெஸின் பொது செய்தி தொடர்பாளரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், கொரோனாவிற்கு எதிரான இந்த போரில், அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என பொதுச்செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் மூலம், எந்த வொரு நாடும், உதவும் நிலையில் இருந்தால், அதனை செய்ய வேண்டும். அப்படி செய்யும் நாடுகளை நாங்கள் வணங்குவதுடன், பாராட்டு தெரிவிக்கிறோம் என்று கூறினார்.

Similar News