பாகிஸ்தான் முகத்தில் மீண்டும் கரி பூசப்பட்டது! 370 நீக்கத்துக்கு ஐ.நா, அமெரிக்காவை தொடர்ந்து ரஷ்யாவும் ஆதரவு!!

பாகிஸ்தான் முகத்தில் மீண்டும் கரி பூசப்பட்டது! 370 நீக்கத்துக்கு ஐ.நா, அமெரிக்காவை தொடர்ந்து ரஷ்யாவும் ஆதரவு!!

Update: 2019-08-10 11:46 GMT


காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை நீக்கிய நரேந்திர மோடி அரசு, மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசமாக பிரித்தது. 


இந்தியாவின் உள்நாட்டு விவகாரமான 370 நீக்கத்தை சர்வதேச பிரச்சினையாக்க பாகிஸ்தான் முயற்சித்து மூக்கை உடைத்துக்கொண்டதுதான் மிச்சம்.


இது தொடர்பாக ஐ.நா சபையில் பாகிஸ்தான் புகார் அளித்துள்ளது. இதனை ஐ.நா.சபை நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக பதிலளித்துள்ள ஐ.நா. சபை பொது செயலாளர் அந்தோணியோ கட்டாரஸ்,”சிம்லா அமைதி ஒப்பந்தத்தின்படி, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பிரச்சினைகளை அவர்களே தங்களுக்குள் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். 3-வது மத்தியஸ்தத்திற்கு இதில் இடமில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.


இதன் மூலம் காஷ்மீர் தொடர்பான பிரச்சினையில் ஐ.நா தலையிடாது என்பதை திட்டவட்டமாக  தெரிவித்துவிட்டனர்.


இதேபோல அமெரிக்காவும் ஏற்கனவே பாகிஸ்தானுக்கு டாடா காட்டிவிட்டது. இந்தியாவுக்கு ஆதரவான நிலைபாட்டையே அமெரிக்கா எடுத்துள்ளது.


இப்போது ரஷ்யாவும் பாகிஸ்தானுக்கு பெப்பே காட்டியுள்ளது.


இது தொடர்பாக ரஷ்யா வெளியுறவு அமைச்சகம் வெளியிடப்பட்ட அறிக்கை, “காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதும், 2 யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டதும், இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு செய்யப்பட்டது. இதனால், அங்கு ஏற்பட்டுள்ள சூழ்நிலையை, மோசமாக்க, சம்பந்தப்பட்ட நாடுகள் அனுமதிக்காது என நம்புகிறோம். இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்னையை, சிம்லா மற்றும் லாகூர் ஒப்பந்தம் அடிப்படையில், தூதரக மற்றும் அரசியல் ரீதியில் தீர்க்கப்படும் என நம்புகிறோம்” என்று அதில் கூறப்பட்டுள்ளன.


இதனால், பாகிஸ்தானின் முகத்தில் மீண்டும் ஒருமுறை கரி பூசப்பட்டுள்ளது.


Similar News