ஆப்கான் விவகாரம் ! ஐநா சபையில் இன்று ஆலோசனை!
ஆப்கானிஸ்தான் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த அமெரிக்க படைகள், அதிபர் ஜோ பைடனின் உத்தரவுப்படி வாபஸ் பெறப்பட்டு வருகின்றன. இதனை பயன்படுத்தி தாலிபான் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் நாட்டில் பல்வேறு நகரங்களை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டனர்.;
ஆப்கானிஸ்தான் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த அமெரிக்க படைகள், அதிபர் ஜோ பைடனின் உத்தரவுப்படி வாபஸ் பெறப்பட்டு வருகின்றன. இதனை பயன்படுத்தி தாலிபான் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் நாட்டில் பல்வேறு நகரங்களை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டனர்.
இதனிடையே, ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தனது பதவியை ராஜினாமா செய்ததுடன் காபூல் நகரத்தை விட்டு வெளியேறியதாக தகவல் வருகிறது. அவர் அருகாமையில் உள்ள தஜிகிஸ்தான் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் அமெரிக்க தொலைக்காட்சிகள் தகவல் தெரிவிக்கிறது.
இந்நிலையில், தாலிபான் தீவிரவாதிகள் அதிகாரத்தை கைப்பற்றிய நிலையில், அந்நாட்டில் நிலவுகின்ற சூழல் குறித்து ஆலோசிப்பதற்காக ஐநா பாதுகாப்பு சபை இன்று கூடுகிறது. இதில் பொதுச்செயலாளர் அண்டோனியோ குடாரெஸ் உரையாற்ற உள்ளார்.
Source: Dailythanthi
Image Courtesy: Dailythanthi
https://www.dailythanthi.com/News/World/2021/08/16050635/UNSC-meeting-about-situations-in-Afghanistan.vpf