ஆப்கானை விட்டு முற்றிலும் வெளியேறிய அமெரிக்க ராணுவம்.. சுதந்திரம் கிடைத்ததாக தாலிபான் பயங்கரவாதிகள் கொண்டாட்டம் !

ஆப்கானிஸ்தானில் இருந்து தங்களது படை முற்றிலும் வெளியேறிவிட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இதனால் முழு சுதந்திரத்தை நாங்கள் அடைந்து விட்டோம் என்று தாலிபான் பயங்கரவாதிகள் கொண்டாடி வருகின்றனர்.

Update: 2021-08-31 06:36 GMT

ஆப்கானிஸ்தானில் இருந்து தங்களது படை முற்றிலும் வெளியேறிவிட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இதனால் முழு சுதந்திரத்தை நாங்கள் அடைந்து விட்டோம் என்று தாலிபான் பயங்கரவாதிகள் கொண்டாடி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்கா ராணுவம் பயங்கரவாதிகளுக்கு எதிராக வேட்டையாடி வந்தது. இதனிடையே அமெரிக்க படைகள் அனைத்தும் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியேறிவிடும் என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.

அதன்படி ஒரு நாளைக்கு முன்பாகவே அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு முற்றிலும் வெளியேறியுள்ளது. இதனை அந்நாட்டு ராணுவ ஜெனரல் கென்னத் மெக்கென்ஸி உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், அமெரிக்கபடைகளின் தலைவரும், அமெரிக்க தூதரும் கடைசி நபர்களாக விமானத்தில் ஏறியதாகவும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்க ராணுவம் நாட்டை விட்டு வெளியேறியதை தாலிபான் பயங்கரவாதிகளின் செய்தித் தொடர்பாளர் உறுதிபடுத்தியுள்ளார். அமெரிக்க ராணுவங்கள் வெளியேறியதை தொடர்ந்து காபூல் நகரத்தில் தாலிபான்கள் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு கொண்டாடியதாக செய்திகள் வெளிவருகிறது.

Source, Image Courtesy: Puthiyathalamurai

https://www.puthiyathalaimurai.com/newsview/114331/US-military-has-completely-withdrawn-from-Afghanistan

Tags:    

Similar News