தாலிபான்களின் அரசை அங்கீகரிப்பதில் அவசரம் காட்டப்படாது ! - அமெரிக்கா!
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பிடித்துள்ள நிலையில் புதிய அரசாங்கத்தை அமைத்துள்ளனர். தற்போது அமையும் இடைக்கால அரசில் முல்லா முகம்மது ஹசன் அகண்ட் தலைவராகவும், தாலிபான் தலைவர் முல்லா பரதர், துணைத் தலைவர்களில் ஒருவராகவும் இருப்பார்.

வெளியுறவுத்துறை துணை அமைச்சராக ஷேர் முகம்மது அப்பா ஸ்டானிக்சாயும், உள்துறை அமைச்சராக சிராஜுதீன் ஹக்கானியும் இருப்பார்கள் என்று தாலிபான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் அமைய உள்ள தாலிபான்களின் அரசை அங்கீகரிப்பதில் அமெரிக்க அவசரம் காட்டாது என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது. இது பற்றி வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் பெஸ்கி கூறுகையில், தாலிபான்கள் அரசை அங்கீகரிப்பதில் எவ்வித அவசரமும் இல்லை. தாலிபான்களின் நடவடிக்கையை பொறுத்து அமையும்.
மேலும், உலக நாடுகள் பார்த்து கொண்டிருக்கின்றது. அதே போன்று அமெரிக்காவும் தாலிபான்களை கண்காணித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: DailyThanthi